Aadhaar Photo Change: இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும். அரசு முதல் தனியார் நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்மில் பெரும்பாலோருக்கு நமது ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் நமக்கு பிடித்தமான வகையில் இல்லை என்பது உன்மையாகும். பலருக்கு அவர்களது ஆதார் அட்டையில் உள்ள புகைப்படங்களை பார்த்து வேடிக்கையாக உள்ளது. உங்களுக்கும் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பிடிக்காமல், அதை மாற்ற வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதை எளிதாக செய்து முடிக்கலாம். 


புகைப்பட புதுப்பிப்புக்கு UIDAI அனுமதி அளிக்கிறது: இந்திய தனித்து அடையாள ஆணையம் (UIDAI Update) ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் புகைப்படத்தை ஆதார் அட்டையில் மாற்ற அனுமதிக்கிறது. ஆதார் அட்டையில் ஒரு நல்ல புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய வழிகளை இங்கே காணலாம்: 


ஆதார் அட்டைதாரர்கள் (Aadhaar Card Holders) தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்துக்கு சென்று இந்த பணியை செய்து முடிக்கலாம். இதன் செயல்முறையை இங்கே காணலாம்: 


- முதலில், UIDAI வலைத்தளமான uidai.gov.in இல் உள்நுழைந்து ஆதார் பதிவு படிவத்தைப் (Aadhaar Enrollment Form) பதிவிறக்க வேண்டும்.
- இந்த ஆதார் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்தில் சமர்ப்பிக்கவும்.


ALSO READ: Aadhaar-PF இணைப்பு கட்டாயம்; இணைக்கவில்லை என்றால் பெரும் நிதி இழப்பு ஏற்படலாம்


- பிறகு ஆதார் சேர்க்கை மையத்தில் உள்ள ஊழியர் உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை எடுத்துக்கொள்வார்.
- இதன் பின்னர் ஆதார் சேர்க்கை மையத்தின் ஊழியர் உங்கள் புகைப்படத்தை எடுப்பார்.
- அதற்குப் பிறகு, ரூ .25 + ஜிஎஸ்டி என்ற கட்டணத்தை செலுத்திய பிறகு, ஆதார் சேர்க்கை மையத்தின் ஊழியர் உங்கள் ஆதார் அட்டையில் புதிய புகைப்படத்தை புதுப்பிப்பார்.
- ஆதார் சேர்க்கை மையத்தின் பணியாளர் யுஆர்என் (URN) உடன் உங்களுக்கு ஒரு சீட்டையும் வழங்குவார். 
- இந்த URN-ஐ பயன்படுத்தி, உங்கள் ஆதார் அட்டை புகைப்படம் மாற்றப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். 
- ஆதார் அட்டையில் புகைப்படம் புதுப்பிக்கப்பட்ட பிறகு, புதிய புகைப்படத்துடன் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை UIDAI வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் (Aadhaar Card Download) செய்து கொள்ளலாம்.


ALSO READ: ஒரே மொபைல் எண் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC Aadhaar Card-ஐ பெறலாம்: வழிமுறை இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR