Aadhaar Card Update: ஆதார் அட்டையில் பிறந்த தேதி தவறாக இருந்தால் மாற்ற முடியுமா... விதிகள் கூறுவது என்ன

ஆதார் அட்டை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. எனவே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிறந்த தேதி போன்றவை சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்
ஆதார் அட்டை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. தனிப்பட்ட அடையாள ஆவணமாக, கிட்டத்தட்ட அனைத்து பொது மற்றும் தனியார் துறைகளால் இந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இதில் தனிப்பட்ட விவரங்கள் மட்டுமின்றி, தனிநபர்களின் பயோமெட்ரிக் விபரங்களும் உள்ளன. எனவே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிறந்த தேதி போன்றவை சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
ஆதார் அட்டை பயன்பாடு காரணமாக பல பணிகளில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது. அரசின் பல திட்டங்களின் பலன்களைப் பெறவும் இவை அவசியம். இது தவிர, நீங்கள் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்தாலும் அல்லது வங்கிக் கணக்கைத் திறக்கும் போதும் ஆதார் அவசியம். ஆதார் அட்டை இல்லை என்றால் உங்களின் பல பணிகள் முடங்கும். நமது முக்கியமான பல தகவல்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆதார் அட்டையில் நமது பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆதார் அட்டை தயாரிக்கும் போது, சில சமயங்களில் தவறான தகவல்கள் அதில் பதியப்படுவதை பார்க்கலாம். இதனால், ஆதார் அட்டையில் உள்ள தவறான தகவல்களை புதுப்பிக்க UIDAI வாய்ப்பளிக்கிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று அதை சரி செய்து கொள்ளலாம்.
பல சமயங்களில், மக்களின் ஆதார் அட்டையில் பிறந்த தேதித் தகவல் தவறாகப் பதிவு செய்யப்படுகிறது. ஆதார் அட்டையில் தவறான பிறந்த தேதி விவரங்களை, குறிப்பிட்ட முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதி தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிறந்த தேதியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை புதுப்பிக்க UIDAI உங்களுக்கு வாய்ப்பளிக்காது.
ஆதார் அட்டையில் பிறந்த தேதியைப் புதுப்பிக்கும் செயல்முறை மிகவும் எளிதானது. இதில் நீங்கள் எந்த விதமான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதில்லை. இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்குப் பிறகு நீங்கள் அங்கு ஆதார் விபரங்களை திருத்துவதற்கான படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்யும் போது, உங்கள் பிறந்த தேதியை புதுப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட வேண்டும். படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் பயோமெட்ரிக் மற்றும் பிற விவரங்களைக் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் பிறந்த தேதியைப் புதுப்பிக்க ஒரு கோரிக்கை வைக்கப்படும். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் பிறந்த தேதி ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும்.
இருப்பினும், சில விதிவிலக்குகளின் அடிப்படையில், UIDAI அனுமதித்த அதிகபட்ச எண்ணிக்கையை தாண்டி ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினத்தை அட்டைதாரர்கள் மாற்றலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ