Aadhaar முக்கிய செய்தி: புதிய வசதியை அளித்துள்ளது UIDAI!!
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஆகியவை ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே மொபைல் எண்ணை புதுப்பிக்க வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
Aadhaar Important Update: ஆதார் அட்டை இந்திய மக்களின் முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வப்போது ஆதார் அட்டையிலும் ஆதார் சேவைகளிலும் UIDAI பல புதுப்பிகளை செய்து வருகிறது. ஆதார் குறித்து ஒரு பெரிய புதுப்பிப்பு வந்துள்ளது. இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியின் கீழ், இப்போது நீங்கள் ஆதாரில் (Aadhaar) உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. தபால்காரர் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே இந்த வேலையை செய்து முடிக்கலாம். தபால்காரர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பார். அதன் விவரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
UIDAI-IPPB க்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஆகியவை ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே மொபைல் எண்ணை புதுப்பிக்க வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் கீழ், தபால்காரர்கள் வீட்டிற்கே வந்து ஆதார் அட்டையின் மொபைல் எண்ணை புதுப்பிப்பார்கள்.
ALSO READ: Ratiion Card: ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை அவகாசம்
IPPB இடம் பெரிய பிணையம் உள்ளது
வீட்டிற்கே வந்து ஆதாரில் மொபைல் எண்ணை புதுப்பிக்கும் வசதி ஒரு பரந்த நெட்வொர்க் மூலம் சாத்தியமாகும். இந்த சேவை 650 இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) இணைப்பு, 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராமின் டாக் சேவகர்கள் (ஜிடிஎஸ்) நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும். ஐபிபிபி எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜே வெங்கடராமு கூறுகையில், யுஐடிஏஐ-யின் மொபைல் புதுப்பிப்பு சேவை, தபால் நிலையங்கள், தபால்காரர்கள் மற்றும் ஜிடிஎஸ் ஆகியவற்றின் பரந்த நெட்வொர்க் மூலம் வங்கி சேவைகள் கிடைக்காத பகுதிகளிலும் கிடைக்கும் என்றார்.
குழந்தைகள் சேர்க்கை சேவை விரைவில் தொடங்கும்
IPPB தற்போது மொபைல் புதுப்பிப்பு சேவையை மட்டுமே வழங்குகிறது. மிக விரைவில் அதன் நெட்வொர்க் மூலம் குழந்தைகளின் சேர்க்கை சேவையையும் தொடங்கும். யுஐடிஏஐ-yin படி, இந்த ஆண்டு மார்ச் 31 வரை 128.99 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
மொபைல் எண் புதுப்பித்தல் அவசியம்
உங்கள் மொபைல் எண்ணை (Aadhaar Mobile Link) மாற்றியிருந்தால், நிச்சயமாக அதை ஆதாரில் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். எந்தவொரு சரிபார்ப்பு செயல்முறைக்கும் நீங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தினால், உங்கள் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். இந்த OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியில் வரும். அத்தகைய சூழ்நிலையில், ஆதாரில் உங்களது பழைய அல்லது தவறான எண் இருந்தால், நீங்கள் நீங்கள் OTP ஐப் பெற முடியாது. ஆகையால் ஆதாரில் உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிக முக்கியமாகும்.
ALSO READ: Aadhaar அட்டையில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா; நொடியில் மாற்றலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR