Aadhaar Update: உங்கள் மொழியில் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம், வழிமுறைகள் இதோ
Aadhaar Card Update: இந்தியாவில் ஆதார் அட்டை பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது.
பிராந்திய மொழியில் ஆதார் அட்டை புதுப்பிப்பு: கடந்த சில ஆண்டுகளில் ஆதார் அட்டையின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது.
குழந்தையின் பள்ளி சேர்க்கை முதல் கல்லூரி சேர்க்கை வரை, பயணத்தின் போது அடையாளச் சான்றாக, வங்கிக் கணக்கு தொடங்க அல்லது டீமேட் கணக்கைத் தொடங்க என ஆதார் அட்டை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா தொற்றுநோயைத் தவிர்க்க தடுப்பூசி போடும்போதும் இது தேவைப்படுகிறது. இதனுடன், சொத்து வாங்கும் போதும், நகை வாங்கும்போதும் ஆதார் அட்டை அவசியமான ஒரு ஆவணமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், ஆதார் அட்டையில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். நமது நாட்டு மக்கள் தொகையில், ஆங்கில மொழி தெரியாமல், தங்கள் உள்ளூர் மொழி, அதாவது தாய் மொழி மட்டுமே தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அப்படிப்பட்டவர்களின் வசதிக்காக, உள்ளூர் மொழியிலும் ஆதார் அட்டையை புதுப்பிக்கும் வசதியை யுஐடிஏஐ வழங்கியுள்ளது. நீங்கள் உங்கள் மொழியில் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க விரும்பினால், இந்த செயல்முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பிராந்திய மொழியில் ஆதாரை புதுப்பிப்பதற்கான செயல்முறை:
உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்து, நீங்கள் அதை புதுப்பிக்க விரும்பினால், ஆதார் அட்டை வழங்கும் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI https://uidai.gov.in/ஐ கிளிக் செய்யவும். இந்த இணையதளத்தில் கிளிக் செய்தவுடன், ஆதார் சேவை பிரிவு அப்டேட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கவும்; எளிமையான செயல்முறை இதோ
இங்கே உங்கள் ஆதாரின் 12 இலக்க தனிப்பட்ட எண் கேட்கப்படும். அதை நிரப்பவும். அடுத்து நீங்கள் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். அடுத்து உங்களிடம் சில விவரங்கள் கேட்கப்படும். உடனடியாக அவற்றை நிரப்பவும். அதன் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும், அதை நிரப்ப வேண்டும். அடுத்து அப்டேட் டேட்டா பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் உங்கள் பிராந்திய மொழியில் ஆதாரை புதுப்பிக்க விரும்பினால், பிராந்திய மொழிக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பிறகு விவரங்களை நிரப்பவும். விவரங்களை நிரப்பும் போது, அனைத்து விவரங்களும் சரியான உச்சரிப்பில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
- இதற்குப் பிறகு மீண்டும் ஒரு ஓடிபி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். அதை உள்ளிட வேண்டும்.
- அடுத்து 'ப்ரொசீட்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அதன் பின்னர் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
- நெட் பேங்கிங் போன்றவற்றின் மூலம் ஷேர் செய்யலாம்.
- இதற்குப் பிறகு, 3 வாரங்களில் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையைப் பெறுவீர்கள்.
- இந்த ஆதார் அட்டையை ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
- இது தவிர, நீங்கள் PVC ஆதார் அட்டையையும் ஆர்டர் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR