ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை காலவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை இப்போது நீடித்திருக்கிறது மத்திய அரசு. 2015 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த திட்டத்தை கொண்டுவர முயற்சித்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தத்து. அதனை தொடர்ந்து ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை கட்டாயமில்லை என அறிவித்த மத்திய அரசு, மீண்டும் அந்த திட்டத்தை கையில் எடுத்தது. இதற்கான பணிகள் 2021 ஆம் ஆண்டு முதல் முடுக்கிவிடப்பட்டன. 


மேலும் படிக்க | உங்கள் ஆதாரை வெரிபை பண்ணிட்டீங்களா? இல்லைனா உடனே பண்ணிடுங்க!


காலவகாசம் நீட்டிப்பு 


இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசு நினைத்த நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பணிகள் பாதியளவுக்கு கூட நிறைவேற வில்லை. மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே காலவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலவகாசத்தை மத்திய அரசு அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது. அதாவது, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் அனைவரும் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு ஏன்?


நாடு முழுவதும் பெரும்பாலான அரசு சேவைகளைப் பெற ஒரே ஆணவமாக ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் போலியாக அரசு சேவைகளை பெறுவதை தடுக்க முடிகிறது. அதேபோல், போலி வாக்காளர்களையும் எளிதில் அடையாளம் காண ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அவசியமாகிறது. இறந்தவர்கள் மற்றும் ஒருவர் இரண்டு இடங்களில் வாக்குரிமை வைத்திருப்பது உள்ளிட்டவைகளை அடையாளம் காணவும், வெவ்வேறு அரசு சேவைகளில் வெவ்வேறு ஆவணங்களை கொடுத்து சேவைகளையும் திட்டங்களையும் பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த இணைப்பை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 


ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பது எப்படி?


ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைகாதவர்கள் https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் எனும் செல்போன் ஆப் மூலமாகவும் இணைத்துக்கொள்ளலாம். வாக்காளர் பதிவு அலுவலரிடம் ஆதார் கார்டு-வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக்கொள்ளலாம். அதேநேரத்தில் ஆதார் - பான் எண் இணைப்புக்கான காலவகாசம் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Pan Aadhaar Linking: இதுதான் கடைசி தேதி...ஆன்லைனில் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ