புதுடெல்லி: ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.கோள்களின் பாதை, அவற்றின் சஞ்சாரம், பரிவர்த்தனை, உச்சமாவது, நீச்சமடைவது என பல காரணிகள் ஒரு நபரின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின்படி செல்வத்தின் காரணியான சுக்கிரன் தற்போது தனுசு ராசியில் பின்னோக்கி சென்று வீற்றிருக்கிறார். ஜனவரி 30ஆம் தேதியன்று சுக்கிரன் மகர ராசியில் நுழைகிறார். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) பண பலன்களைக் கொடுக்கும்.


சுக்கிரனின் சஞ்சாரத்தால் பலனடைபவர்கள்
ஜனவரி 30 ஆம் தேதி, செல்வம், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு ஆகியவற்றுக்கு காரணமான சுக்கிரன் மகர ராசியில் மகர ராசியில் நுழைகிறார். ஜோதிட சாஸ்திரப்படி ரிஷபம் மற்றும் துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன்.


ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 


இது தவிர மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். அதேசமயம் கன்னி ராசியில் (Zodiac Sign) சுக்கிரம் நீச்சமாகிவிடுவார் என்று கருதப்படுகிறது. மறுபுறம், மகர ராசி சனீஸ்வரரின் வீடாக கருதப்படுகிறது. சனி மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உள்ளது. 


இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிப்பதால் மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்குப் பலன்கள் அதிக அளவில் கிடைக்கும். இதனுடன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக சுக்கிரன் கருதப்படுவதால், ரிஷபம், துலாம் ராசிக்காரர்களும் சுக்கிரனின் இந்த பரிவர்த்தனையின் முழுப் பலன்களையும் பெறுவார்கள்.


சுக்கிரனின் ராசி மாற்றம் எப்போது நடக்கும்?
சுக்கிரன் தற்போது தனுசு ராசியில் சஞ்சரிக்கும் நிலையில் இருக்கிறார். 30 டிசம்பர் 2021க்கு பரிவர்த்தனையான சுக்கிரன் தனுசு ராசியில் இருக்கிறார். மகர ராசிக்கு 26 பிப்ரவரி 2022இல் பரிவர்த்தனை செய்யும் சுக்கிரன் ஏப்ரல் 27ஆம் தேதி மீன ராசியில் நுழைகிறார். பின்னர் மே 23ல் மேஷ ராசிக்கு செல்வார்.


ALSO READ | இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR