2022 இல் இந்த ராசிக்காரர்களுக்கு காலசர்ப்ப தோஷம் பாடாய் படுத்தி போகிறது

காலசர்ப்ப தோஷம் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் மனதில் பயம் வரத் தொடங்குகிறது. காலசர்ப்ப தோஷம் கஷ்டங்களை மட்டுமே தரும் என்பது போன்ற ஒரு நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 01:51 PM IST
2022 இல் இந்த ராசிக்காரர்களுக்கு காலசர்ப்ப தோஷம் பாடாய் படுத்தி போகிறது title=

Kalsarp dosh 2022: ஜோதிட சாஸ்திரப்படி, 2022 ஆம் ஆண்டில் கால சர்ப் யோகத்தின் உருவாக்கம் சில ராசிகாரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஜோதிடரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு கால் சர்ப்ப தோஷம் சில சிரமங்களைத் தர உள்ளது, ஆனால் இதைப் பற்றி பீதியடைய தேவையில்லை, இதைத் தவிர்க்க ஜோதிடத்தில் சில முக்கிய பரிகாரங்களை மேற்கொண்டால் போதும். அவை என்ன பரிகாரங்கள் என்பதை பார்ப்போம்.

ரிஷபம்: 2022-ம் ஆண்டு ஜாதகத்தில் உருவாகும் காலசர்ப்ப யோகம் ரிஷப ராசியினருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக முதல் 3 மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதனால் அவரது தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். இது தவிர, இந்த ராசிகாரர்களின் முக்கிய பொருள் ஏதேனும்  திருடப்படலாம் அல்லது ஏமாற்றப்படலாம், எனவே கவனமாக இருங்கள்.

ALSO READ | 2022 இல் வேலை, தொழிலில் வெற்றி கொடி நாட்ட உள்ள ராசிகள் இவர்களே

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு பகுதி விஷ யோகத்தை உண்டாக்குகிறது. வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். 24 ஏப்ரல் 2022 வரை உணவு மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்கவும். நீங்கள் மதுப்பிரியர்கள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். மற்றவர்களின் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் மனச்சோர்வுக்கு பலியாகலாம். குறிப்பாக 24 ஏப்ரல் 2022 வரையில் நேரம் மோசமாக இருக்கிறது.

மீனம்: இந்த நேரம் மீன ராசிக்காரர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை கொடுக்கும்  ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள். அதேசமயம் ஒருவரைப் பிரியும் துக்கமும் ஏற்படலாம். எனவே சிறிது பொறுமையுடன் கையாள்வது நல்லது.

ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன என்பதை விரிவாக காண்போம்.

* அரச மரம் மும்மூர்த்திகளை அடங்கியது. அரச மரத்தடியில் இருக்கும் விநாயகரை வணங்கி, அரசமரத்தடியில் இருக்கும் நாகர் சிலையை வழிபடலாம்.
* காலை, மாலை என இருவேளையும் நாதஸ்வரத்தின் ஒலியை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அது இந்த தோஷத்தில் இருந்து வரும் பாதிப்புகள் குறைவதற்கு வழிவகை செய்யும்.
* கோவிலுக்கு தேவைப்படும் மணி உங்களால் முடிந்த அளவிற்கு எடை கனமாகவும், அருமையாகவும் செய்யப்பட்டுள்ள கோவில் மணியை வாங்கிக் கொடுத்தால் தோஷத்திலிருந்து நீங்க பெறுவதாக ஐதீகம் உள்ளது.
* ராகுவின் ஆலயங்களாக திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்புரம் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று இறைவனை வழிபட கால சர்ப்ப தோஷம் விலகி நன்மைகள் நடக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்வல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | 2022-ல் அமையவுள்ளன அட்டகாசமான 4 யோகங்கள்: இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News