ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.


இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகள் வீசிப்பட்டன. 12 மிராஜ் 2,000 ரக போர் விமானங்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சுமார் 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசியதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்தன.


இந்த அதிரடி தாக்குதலை நடத்திய இந்திய விமானபடைக்க பலதரப்பில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். போர் மீது விருப்பமில்லை, ஆனால் தீவுரவாதத்தின் மீது தீவைப்பதைத் தவிர வேறு வழியில்லை.... ஆகாய வீரர்களே, அசகாய சூரர்களே, அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம் என - கவிஞர் வைரமுத்து



பயங்கரவாத முகாம்களை அழித்த வீரர்களால் நாட்டுக்கு பெருமை. இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது. பார்வை
அணிகளை மூடுவதற்கான நேரம். IFA அமைதிக்கான போராட்டம் மற்றும் வாழ்க்கைக்கான மரியாதை - கிரண்பேடி



இந்திய விமானப்படையின் வீரதீர செயலுக்கு பெருமைப்படுகிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்



பயங்கரவாத முகாம்களை அழித்த வீரர்களால் நாட்டுக்கு பெருமை. பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு வணக்கங்களை தெரிவிக்கிறேன்! - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி



பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டால் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடந்துள்ளது. பாக்.கில் இருந்து செயல்பட்டுவந்த பயங்கரவாதமுகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழக சார்பில்  வாழ்த்து - முதல்வர் பழனிசாமி. 



இந்திய விமானப்படைக்கு குவியும் பாராட்டுகள்..! இந்திய விமானப்படை வீரர்களை நாட்டின் அற்புதமான வீரர்கள் என்றும் கூறலாம் - மம்தா பானர்ஜி



தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்



இந்திய விமானப்படைக்கு குவியும் பாராட்டுகள்..! நாட்டு மக்களை பாதுகாக்க விமானப்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் - பிரகாஷ் ஜவடேகர் 



இந்திய விமானப்படைக்கு குவியும் பாராட்டுகள்..! இந்திய விமானப்படைக்கும் ஆயுதப்படைக்கும் என் வணக்கங்களும் பாராட்டுகளும் - அகிலேஷ் யாதவ். 



இந்திய விமானப்படைக்கு குவியும் பாராட்டு... கிரிக்கெட் வீரர் சேவாக் வாழ்த்து!



“இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” - ராகுல் காந்தி. 



பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை வீரர்கள் பெருமைப்படுத்தியுள்ளனர் - அரவிந்த் கெஜ்ரிவால். 





ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது!!