வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் திசை மற்றும் அதன் வடிவமைப்பில் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீடு கட்டும் போது வாஸ்து விதிகளைப் புறக்கணித்தால், எதிர்மறை ஆற்றல் வீட்டில் தங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.  அத்தகைய சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கி, நேர்மறை ஆற்றலைப் புகுத்துவதற்கு வீட்டில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் வழிபாடு கோவில்


வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வழிபாட்டிற்கு மிகவும் பொருத்தமான திசை வடகிழக்கு (கிழக்கு-வடக்கு மூலை) ஆகும். வீட்டின் கோவில் எப்போதும் கிழக்கு, வடக்கு அல்லது கிழக்கு-வடக்கு கோணத்தில் இருக்க வேண்டும். மேலும் கோவில் சற்று உயரத்தில் இருக்க வேண்டும். இத்தகைய முறையில் நீங்கள் உங்கள் வீட்டு வழிபாட்டு அறையை அமைக்கவில்லை என்றால் மாற்றி அமைப்பது சிறந்தது. 


மேலும் படிக்க | புதன் அஸ்தமனம்: ஏப்ரல் 12 வரை இந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் தொடரும், ஹை அலர்ட் தேவை


கடிகாரம்


வீட்டில் கடிகாரம் சரியான இடத்தில் நிறுவப்படவில்லை என்றால், வாழ்க்கையில் பல நிதி சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்புள்ளதாம். வாஸ்து படி வீட்டில் கடிகாரத்தை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்க கூடாது. அதே நேரத்தில், கடிகாரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைக்கலாம். கடிகாரத்தை தப்பான திசையில் நீங்கள் வைத்திருந்தால் உடனே வாஸ்துபடி மாற்றி வையுங்கள். 


துளசி


துளசிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. வீட்டின் முற்றத்தில் துளசி செடியை நட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது தவிர வீட்டின் கிழக்கு அல்லது கிழக்கு-வடக்கு திசையில் துளசி செடியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு துளசி செடியை நடுவதன் மூலம் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சி நீங்காமல் பெருகும். 


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண வரவும் வெற்றியும் ஏற்படும்..!!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR