Actor Madhavan Lifestyle Tips: வசீகரமிக்க நடிகர்களில் மாதவனும் ஒருவர். அலைபாயுதே படத்தில் அறிமுகமானதில் இருந்து சமீபத்தில் வந்த ராக்கெட்டரி படம் வரை பார்த்தோமானால் அவர் பல உருமாற்றங்களை பெற்றுவிட்டாலும் அந்த வசீகரம் மட்டும் இன்னும் குறையவில்லை. ஒரு படத்திற்காக எடையை அதிகரிப்பது, குறைப்பது என்பது நடிகர்களின் வாழ்வில் இயல்பாகும். அதிலும் உடல் எடையை குறைப்பதற்கு என வந்துவிட்டால் அவர்கள் மிக கடினமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவார்கள். உடற்பயிற்சி கூடத்திலேயே கிடையாக கிடப்பார்கள், உணவுப் பழக்கவழக்கத்திலும் கடுமையாக இருப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், நடிகர் மாதவன் ஜிம்முக்கு கூட செல்லாமல் தனது உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார். அதாவது, ரன்னிங்கும்  செல்லாமல் வெறும் 21 நாள்களில் உடல் எடையை குறைத்ததாக சமீபத்தில் ஒரு யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மாதவன் தெரிவித்துள்ளார். ராக்கெட்டரி திரைப்படத்திற்காக அவர் தனது எடையை குறைத்தார். அதுதான் அவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மாதவனின் ஃபிட்னஸ் ரகசியம் 


இந்த திரைப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்தது குறித்தும் அவர் பேசியிருந்தார். அதில் தனது பல ஃபிட்னஸ் ரகசியங்களை கூறியிருந்தார், அதில் உணவு மெல்லும் பழக்கத்தையும் ஃபிட்னஸ் ரகசியமாக கூறியிருந்தார். அதாவது, மாதவன் சாப்பிடும்போது தனது உணவு 45-60 முறை மென்று அதன்பின்னர் தான் விழுங்குவார் என தெரிவித்துள்ளார். மேலும், இதனை மாதவன் இவ்வாறு சுருக்கமாக விவரித்தார்: "உங்கள் சாப்பாட்டை குடியுங்கள், தண்ணீரை மென்று விழுங்குகள்" என்றார்.


மேலும் படிக்க | தொப்பை சீக்கிரம் குறைய சைக்கிளிங் செய்யலாமா? ஸ்கிப்பிங் ஆடலாமா? - பெஸ்ட் சாய்ஸ் இதோ


உடல்பயிற்சி இல்லை, ரன்னிங் இல்லை...


எப்படி எடையைக் கூட்டி, அதை விரைவாகக் குறைக்கலாம் என்று நான் நிறைய ஆராய்ச்சி செய்தேன். இந்த ஆராய்ச்சி என்னை அப்ளைடு கினீசியாலஜி எனப்படும் சோதனைக்கு அழைத்து வந்தது. அதாவது, நமது உணர்ச்சி நிலையின் காரணமாக ஒரு வகை உணவை எந்த நேரத்திலும் உடலால் சகித்துக்கொள்ளவே முடியாது" என்றார். மேலும் அவர், "நான் என உடலுக்கு ஒத்துவராத உணவை மட்டுமே சாப்பிட்டேன். எனவே, முழு உடலும் பெருத்தது. குனிந்து என் ஷூ லேஸைக் கட்டுவது கூட ஒருகட்டத்தில் கடினமாக இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்திற்குப் பிறகு, நான் என் உடலுக்கு நல்ல உணவை மட்டுமே சாப்பிட்டேன். உடற்பயிற்சி இல்லை, ரன்னிங் இல்லை, அறுவை சிகிச்சை இல்லை, மருந்து இல்லை உடல் எடை குறைந்துவிட்டது" என்றார். 


உடல் எடை குறைப்பு டிப்ஸ்


இவரின் இந்த கூற்றால் வியப்படைந்த ஒருவர், அவர் பேசிய அந்த காணொலியை X தளத்தில் பதிவிட்டு, 'இது எப்படி சாத்தியம்?' என கேள்வி எழுப்பினார். அதற்கு மாதவன் அவரது X பக்கத்தில் பதிலளித்தார். அதில்,"இடைவிடாத விரதம், உணவை 45-60 முறை அதிகமாக மெல்லுதல் (உங்கள் உணவைக் குடித்து உங்கள் தண்ணீரை மெல்லுங்கள்). டின்னரை மாலை 6.45 மணிக்கே சாப்பிடுவது (அதுவும் சமைத்த உணவுதான். மதியம் 3 மணிக்கு பின் சமைக்காத உணவை சாப்பிடுவதில்லை) ஆழ்ந்த உறக்கம் (உறங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் மொபைல், லேப்டாப் போன்றவற்றை பார்ப்பது இல்லை) ... திரவ உணவை அதிகம் எடுத்துக்கொள்வது... நிறைய பச்சை காய்கறிகள் மற்றும் உணவு. இதனால் உங்கள் உடல் எளிதில் வளர்சிதை மாற்றமடைந்து ஆரோக்கியமாகும்" என்றார்.


மேலும் படிக்க | லெமன் ஜூஸூடன் சேர்ந்து சாப்பிடக்கூடாத உணவுகள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ