சாய் பல்லவி நேச்சுரல் பியூட்டி ரகசியம்! ‘இதை’ முகத்தில் தேய்ப்பாராம்..
Sai Pallavi Skin Care Secrets : பிரபல நடிகை சாய் பல்லவி, இயற்கையாகவே அழகு மிகுந்த நடிகையாக இருக்கிறார். இந்த அழகுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
Sai Pallavi Skin Care Secrets : தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்கி வருபவர், சாய் பல்லவி. சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி, ஸ்கின் டைட்டனிங் உள்ளிட்ட முறைகளை கையாண்டு தங்கள் அழகினை தக்க வைத்துக்கொண்டுள்ளனர் (அதில் தவறு ஒன்றும் இல்லை). சாய் பல்லவி, அப்படி எந்த சிகிச்சைகளையும் மேற்கொள்ளாமல், தனக்கு தெரிந்த இயற்கை வகையில் மட்டும் சருமத்தை பாதுகாத்து வருகிறார். இவர், தன் இயற்கை சருமத்திற்கான குறிப்புகளை சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அது குறித்து இங்கு காணலாம்.
இதுதான் அந்த சீக்ரெட்..
சாய் பல்லவியின் முகத்தில், முகப்பருக்கள் இருப்பதை அனைவருமே கவனித்திருப்போம். பலரும், தன் முகத்தில் முகப்பரு இருந்தால் அதை ஒரு குறையாக எடுத்துக்கொள்கின்றனர். இதற்காக பல்வேறு ஸ்கின் ட்ரீட்மெண்டுகளையும் மேற்கொள்கின்றனர். சாய் பல்லவி, மருத்துவரிடம் இது குறித்து பேசி, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், வீட்டில் இதற்கென்று தான் மேற்கொள்ளும் இயற்கை சிகிச்சை முறைகளை பற்றி பேசியிருக்கிறார்.
தன் முகத்தில் எப்போதெல்லாம் முகப்பரு வருவது பாேல இருக்கிறதாே, அப்போதெல்லாம் அவர் மஞ்சள் பூசுவாராம். அவர் அம்மா, “கொஞ்சம் மீசை வளருவது போல இருக்கிறது பல்லவி” என்று கூறினால் அப்போது தன் முகத்தில் முடி வளரும் இடத்தில் மஞ்சள் பூசிக்கொள்வாராம். இது மட்டுமன்றி, முகத்திற்கு தேன் மற்றும் தயிரையும் அவர் பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார்.
மஞ்சளில் இருக்கும் நன்மைகள்:
மஞ்சள், இயற்கையான மருந்துகளுள் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் ஆகட்டும், முகத்திற்கு தேய்க்கும் கிழங்கு மஞ்சள் ஆகட்டும், எதுவாக இருப்பினும் அது நம் நன்மைக்கே பயன்படும்.
கஸ்தூரி மஞ்சளை பலர் தங்கள் முகத்திற்கு பூசி குளிப்பர். இதற்கு ஆங்கிலத்தில் Wild Turmeric என்று பெயர். இதில், அழற்சி எதிர்ப்பு, ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்திகள் ஆகியவை இருக்கின்றன. இதனால், முகத்தில் இருக்கும் முகப்பரு வடுக்கள், நிறம் மாறுதல், முகத்தில் தேவையற்ற இடங்களில் முடி வளருதல் ஆகியவற்றை தவிர்க்கிறது. அது மட்டுமன்றி, முகப்பொலிவை கூட்டி, வெயிலால் சருமம் பாதிப்படைவதையும் தவிர்க்கிறது. இதனால்தான் கஸ்தூரி மஞ்சள் தேய்த்து முகம் கழுவுபவர்களின் சருமம் தங்கம் போல எப்போதும் மின்னுகிறதாம்.
மேலும் படிக்க | சீக்கிரமாக பணக்காரர் ஆக சீக்ரெட் சொல்லும் புத்தகங்கள்! தவறாமல் படிங்க..
மஞ்சள் தேன் மாஸ்க்:
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
எப்படி தயாரிக்க வேண்டும்?
முதலில் மஞ்சளையும் தேனையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்க வேண்டும்
மிக்ஸ் செய்ததை, சருமத்தில் தடவ வேண்டும். கண்களில் தடவ வேண்டாம்.
15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் முகம் கழுவ வேண்டும்.
இதனை, வெந்நீர் வைத்தோ அல்லது குளிர்ந்த நீர் வைத்து கழுவ வேண்டும்.
மேலும் படிக்க | டயட் இல்லாமல் எடையை குறைத்த ஸ்ருதிஹாசன்! சீக்ரெட் என்ன? ரொம்ப சிம்பிள்!!
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ