துபாய்: துபாயில் உள்ள ஒரு இந்திய கடைக்காரர் லாட்டரி சீட்டில் இரண்டு லட்சம் திர்ஹாம் ($ 54,452) வென்றுள்ளார். என்.ஆர்.ஐ கடைக்காரர் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார். கலீஜ் டைம்ஸ் அறிவித்தபடி, ஸ்ரீஜித் என்ற நபர் இன்பினிட்டி கியூஎக்ஸ் 50 காரையும், துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (டி.எஸ்.எஃப்) 25வது பதிப்பாக இரண்டு லட்சம் திர்ஹாம் ($ 54,452) ரொக்கப் பரிசையும் வென்றார். அதாவது கடைக்காரர் ஒரு சொகுசு கார் மற்றும் ரூ. 38 லட்சம் வென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வெற்றியை குறித்து ஸ்ரீஜித் கூறுகையில், "நான் என் காதுகளை நம்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் வெல்லும் நம்பிக்கையுடன் நான் ஒரு ரிஃப்ல் லாட்டரி டிக்கெட்டை வாங்கி வருகிறேன். இந்த வெற்றி எனக்கு முக்கியமானது. இப்போது நான் நம்புகிறேன் கனவுகள் நனவாகும் என்று" எனக் கூறினார்.


மேலும் பேசிய அவர், "எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இந்த பணம் என் மகன்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்துள்ளது" என்றார்.


பண்டிகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் டி.எஸ்.எஃப் பார்வையாளர்களுக்கு ஒரு இன்பினிட்டி கியூஎக்ஸ் 50 கார் மற்றும் இரண்டு லட்சம் திர்ஹாம்களை இன்பினிட்டி மெகா ராஃபிள் (லாட்டரி) வழங்குகிறது. திருவிழாவின் முடிவில் டி.எஸ்.எஃப் இன் அதிர்ஷ்ட வெற்றியாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். வெற்றி பெறுவோர்களுக்கு 1 மில்லியன் திர்ஹாம் பரிசு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.