பெங்களூரு: பழைய ரயில் பெட்டிகளை அழகான ரெஸ்டாரெண்டுகளாக மாற்றி ரயில்வே தொடர்ந்து புதுமைகளை செய்து வருகிறது. மத்திய ரயில்வே மண்டலத்தின் நாக்பூர் கோட்டம் பழைய ரயில்வே பெட்டியை உணவகமாக மாற்றிய நாக்பூர் ரயில் நிலையம் முதன்முதலில் ‘Restaurant on wheels’ என புதுமையை செய்து அசத்தியது. இதற்கு  பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது பெங்களூருவிலும் இந்த முயற்சி தொடங்கப்பட உள்ளது. ரயில் பெட்டிக்குள் அமர்ந்து சுவையான உணவை ருசிக்க விரும்புபவர்களுக்கு குட் நியூஸ். இந்த ஆண்டு இரண்டு ரயில் பெட்டி உணவகங்கள் தொடங்கப்பட உள்ளன. குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி உணவகங்கள் பெங்களூருவில் உள்ள இரண்டு ரயில் நிலையங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளன. தென் மேற்கு ரயில்வேயால் நவீன வசதிகளுடன் கூடிய ரயில்-கோச் உணவகங்கள் அமைக்கப்படும். கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள சர் எம் விஸ்வேஸ்வரயா டெர்மினல் பெங்களூரு ரயில் நிலையம் (எஸ்எம்விபி) ஆகியவற்றில், வரும் பயணிகள் அக்டோபர் மாதத்திற்குள் புதிய வசதியை அனுபவிக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் பெட்டி உணவகம் குறித்த தகவல்களை தெரிவித்த ரயில்வே துறை அதிகாரிகள், இதுவரை இரண்டு உணவகங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். எவ்வாறாயினும், யஷ்வந்த்பூர் மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட்களின் மறு வடிவமைப்புக்குப் பிறகு, அங்கு இது போன்ற உணவகங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று அவர் மேலும் கூறினார். ரயில்வே துறை அதிகாரிகள் இது குறித்து கூறூகையில், பெங்களூரு கோட்டத்தில் நியமிக்கப்பட்ட இரண்டு ரயில் நிலையங்களின் நிலப்பரப்பில் இரண்டு புதிய ரயில்-கோச் உணவகங்கள் அமைக்கப்படுவதால் பெரிய மாற்றத்திற்கு உள்ளாக உள்ளது என்றார். இந்த உணவகங்கள் இந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேக்கு வருமானத்தை அள்ளி தரும் ‘5’ ரயில்கள் இவை தான்..!!


ரயில்-கோச் உணவகங்கள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், ரயில்வே பொறியியல் துறை விரைவில் தண்டவாளங்கள் அமைக்கும் பணியை தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தென்மேற்கு ரயில்வேயின் (பெங்களூரு பிரிவு) கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் குசுமா ஹரிபிரசாத் PTI-யிடம் கூறுகையில், பயணிகளுக்கு புதிய மற்றும் வித்தியாசமான உணவு அனுபவத்தை வழங்குவதே இத்தகைய உணவகங்களின் முக்கிய நோக்கம் என்றார். ரயில் நிலையங்களில் உணவு விருப்பங்கள் குறைவாகவும், வழக்கமான ரெஸ்ராண்டில் உணவு சாப்பிடும் உணர்வை தராமல் இருப்பதாகவும் அவர் கூறினார், இது போன்ற உணவகங்கள் பயணிகளுக்கு புதிதாக சமைத்த உணவுகளுடன் ரயில் பெட்டியில் சாப்பாட்டு சாப்பிடும் அனுபவத்தை வழங்கும். ஏனெனில் பெரும்பாலான நிலையங்களில் முன் சமைத்த உணவு மட்டுமே கிடைக்கும்.


ரயில்-கோச் உணவகங்கள் அமைக்க உணவகங்கள் பல்வேறு வகையான உணவுகளை வழங்குவதையும், ரயில் நிலையத்திற்கு வெளியே கிடைக்கும் உணவுக்கும், ரயில் நிலைய வளாகத்திற்குள் கிடைக்கும் உணவுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக அவர் கூறினார். அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி உணவகங்கள் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்யும் என்றார். இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படும் என்றார். இந்த இரண்டு ரயில் நிலையங்களின் நுழைவாயிலுக்கு அருகிலும் அமைக்கப்படவுள்ள ரயில் கோச் உணவகத்தில் வட மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் உள்ளே 50 பேர் அமரக்கூடிய வசதியும், ரயில் பெட்டிக்கு வெளியே சிலர் அமரக்கூடிய வசதியும் இருக்கும்.


மேலும் படிக்க | அம்ரித் பாரத் திட்டம்... உலக தரத்தில் ரயில் நிலையங்கள்... பயன்பெறும் தமிழக ரயில் நிலையங்கள் பட்டியல்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ