கடந்த 2012-ம் ஆண்டு ஏர் டெக்கான் விமானம் சேவை நிறுத்தப்பட்டது. இந்த விமானம் தற்போது மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் குறைந்த விலை பயண கட்டணம் நிர்ணயிக்கும் ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் ஒரு ரூபாயில் டிக்கெட் விற்க போவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விமான நிறுவனத்தை சில வருடங்களுக்கு முன்பு கிங் பிஷர் நிறுவனம் வாங்கி இருந்தது. ஆனால் தற்போது ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனியாக செயல்பட இருக்கிறது.


பெங்களூரை சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 1 ரூபாய் டிக்கெட் என நிறைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வேகமாக வளர்ந்து வந்தது.