புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான மக்கள் விமானங்களில் பயணிப்பதை பாதுகாப்பாக கருதுகிறார்கள். இருப்பினும், விமானங்களில் பயணம் செய்வது பொருளாதார ரீதியாக சிலருக்கு அதிக கடினமாக இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், ஏர் இந்தியா விமான கட்டணங்களுக்கான விஷயத்தில் முதியவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. ஏர் இந்தியா இப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கிறது.


ஏர் இந்தியாவின் (Air India) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஏர் இந்தியா இப்போது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனது டிக்கெட்டுகளை பாதி விலையில் விற்பனை செய்யும். இது குறித்த விரிவான தகவல்கள் ஏர் இந்தியா வலைத்தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.


ஏர் இந்தியா விமான டிக்கெட்டில் 50 சதவீத தள்ளுபடி பெற ஏர் இந்தியா வலைத்தளத்தின்படி, சில நிபந்தனைகளையும் ஏற்க வேண்டியிருக்கும்.


ALSO READ: டிசம்பர் 31 வரை 34 ரயில்கள் ரத்து! Indian Railways அதிரடி உத்தரவு!


இவை முக்கியமான நிபந்தனைகளாகும்


- பயணம் செய்பவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அவர் 60 வயதை எட்டியிருக்க வேண்டும்.


- செல்லுபடியாகும் புகைப்பட ஐடி (Photo ID) இருக்க வேண்டும். இதில் பிறந்த தேதியும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.


- எகானமி கேபினில் முன்பதிவு வகுப்பின் அடிப்படை கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் செலுத்த வேண்டும்.


- விமானங்கள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு டிக்கெட் வாங்குவது அவசியமாகும்.


- இந்த சலுகை இந்தியாவில் எந்தவொரு பயணத்திற்கும் செல்லுபடியாகும்.


- டிக்கெட் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் வரை இந்த சலுகை பொருந்தும்.


- குழந்தைகளுக்கு தள்ளுபடி இருக்காது.


நாட்டின் ஒரே அரசு நிறுவனமான ஏர் இந்தியா கடும் கடன் சுமையால் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. ஏர் இந்தியா தற்போது 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனைக் கொண்டுள்ளது, அதற்காக விற்கப்படும் நிலையிலும் உள்ளது.


ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குவதால், அதை மத்திய அரசு (Central Government) தனியார் துறைக்கு ஒப்படைக்க முயற்சிக்கிறது. அண்மையில் ஏர் இந்தியாவை வாங்க ஏலங்களுக்கான அழைப்புகளும் விடுக்கப்பட்டன.


ALSO READ: Indian Railways டிக்கெட் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR