சலுகை விலையில் டிக்கெட்! ஏர் இந்தியா-ன் அதிரடி ஆப்பர்!!
இந்திய பயணிகளை ஈர்க்க இந்திய மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் அதிக அளவில் கட்டண சலுகை ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்துள்ளன. இந்த சலுகை நாளை வரை வழங்கப்படும்.
இந்திய பயணிகளை ஈர்க்க இந்திய மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் அதிக அளவில் கட்டண சலுகை ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்துள்ளன. இந்த சலுகை நாளை வரை வழங்கப்படும்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் விமான கட்டணத்தை அதிரடியாக குறைத்து விற்பனை செய்கிறது. குடியரசு தினத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் சலுகை விலையிலான விமான டிக்கெட் விற்பனையை நேற்று தொடங்கியது. இந்த சலுகை டிக்கெட் விற்பனை நாளை வரை நடைபெறும்.
முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த நிறுவனத்தின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம். இதன் மூலம் உள்நாட்டுக்குள் எக்னாமிக் வகுப்பில் பயணம் செய்ய குறைந்தபட்ச ஒரு வழி கட்டணம் ரூ.979 என்றும், பிசினஸ் வகுப்பில் ரூ.6965 என்ற கட்டணத்தில் பயணிக்கலாம்.
சர்வதேச நாடுகளுக்கான விமான கட்டணத்திலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது .அதன்படி அமெரிக்காவுக்கு எக்னாமி வகுப்பில் சென்று திரும்ப ரூ.55,000த்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதேபோல் இங்கிலாந்துக்கு ரூ.32,000த்தில் செல்லமுடியும். ஆஸ்திரேலியாவிற்கு சென்று திரும்ப ரூ.50,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்க ஆசிய நாடுகளுக்கு கட்டணம் ரூ.11 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது.
இதற்காக டிக்கெட்களை ஏர் இந்தியா இணையதளம், விமான நிறுவனம், நகர புக்கிங் அலுவலகங்கள், பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது.