சென்னை: விமானநிலையத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கான வாய்ப்பு இது. தட்டச்சு தெரிந்திருந்தால் ஒரு லட்ச ரூபாய்க்கு வேலை....விமான நிலைய ஆணையம் வேலைக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூனியர் அசிஸ்டெண்ட் உதவியாளர் பணி இது. தட்டச்சு செய்யும் இந்த பணியில், ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். அதேபோல, 25 வார்த்தைகளை ஹிந்தி மொழியில் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவரா நீங்கள்? உடனே இந்த பணிக்கு விண்ணப்பிக்கவும். இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் சீனியர் அசிஸ்டென்ட் பதவிகளுக்கான காலிப் பணியிடங்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மொத்தமாக 156 காலியிடங்கள் உள்ளன. மேலதிக விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். 

 


ஜூனியர் அசிஸ்டென்ட்  (Fire Service) –  10 ஆம் வகுப்பு + டிப்ளமாஅல்லது 12 ஆம் வகுப்பு 

ஜூனியர் அசிஸ்டென்ட்(Office) – இளங்கலை பட்டம் 

சீனியர் அசிஸ்டென்ட்(Accounts) – இளங்கலை பட்டம் (பி.காம்)

சீனியர் அசிஸ்டென்ட் பதவி (அலுவலக மொழி - இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு) 

ஜூனியர் அசிஸ்டென்ட் (Fire Service) பணிக்கு Driving License (LMV / HV) வைத்திருப்பது அவசியமாகும்.

 


 

Junior Assistant (Office) பணிக்கு  ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஆங்கிலம் மொழியிலும், 25 வார்த்தைகளை ஹிந்தி மொழியிலும் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

 

நிறுவனம் விமான நிலைய ஆணையம்

பணியின் பெயர்    ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் சீனியர் அசிஸ்டென்ட் 

காலிப் பணியிடங்கள்    156

விண்ணப்பிக்க கடைசி தேதி    30.09.2202

விண்ணப்பிக்கும் முறை    ஆன்லைன்

 காலிப்பணியிடங்கள்:

 

ஜூனியர் அசிஸ்டென்ட்  (Fire Service) – 132 

ஜூனியர் அசிஸ்டென்ட்(Office) – 10

சீனியர் அசிஸ்டென்ட்(Accounts) – 13 

சீனியர் அசிஸ்டென்ட் பதவி (Official Language) – 01 

 

சம்பள விவரம்:

ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.31,000/- முதல் ரூ.92,000 வரை 

சீனியர் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.36,000/- முதல் ரூ.1,10,000 வரை 

 


 

வயது வரம்பு:

25.08.2022 நாளன்று 18 வயதிற்கு அதிகமானவராக இருக்க வேண்டும். அதேபோல, 25.08.2022 நாளன்று 30 வயதிற்கு அதிகமானவராக இருக்கக்கூடாது. 

 

தேர்வு விதிகள்:

எழுத்துப்பூர்வமான தேர்வுகள் இருக்கும். அதையடுத்து, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி சோதனை, Physical Endurance Test (PET) மற்றும் Trade Test ஆகியவை இருக்கும்.

 

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Ex-servicemen / Women / PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பொற பிரிவினருக்கு  ரூ.1000/- விண்ணப்பக் கட்டணம் உண்டு.

https://www.aai.aero/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  சமர்ப்பிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்ணப்பிக்க வேண்டிய காலகட்டம்:
01.09.2022 அன்று முதல் 30.09.2022 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.


மேலும் படிக்க | மத்திய அரசுப் பணி! தமிழ்நாட்டில் அருமையான சம்பளத்தில் வேலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ