Airtel, Jio மற்றும் Vi-ன் Work from Home திட்டங்கள்:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா காலத்தில், வேகமான இணைய வசதி மற்றும் மொபைல் தரவுகளுக்கான தேவை பெருகி வருகிறது. பலர் வீட்டிலிருந்து வேலை செய்வதால், அனைவருக்கும் அதிக அளவிலான தரவு வசதியும் வேகமான இணைய வசதியும் தேவைப்படுகிறது. இதற்காக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புதிதாக பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.


நிறுவனங்கள் பயனர்களுக்கான சிறப்பு ‘Work from Home’ திட்டங்களையும் வழங்கி வருகின்றன. இதில் தரவு மட்டுமே கிடைக்கிறது. வழக்கமான ரீசார்ஜுடன் கூடுதல் தரவை விரும்பும் பயனர்கள் Work from Home ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் 100 ஜிபி வரை தரவு கிடைக்கிறது. Vodafone Idea, Airtel மற்றும் Jio வழங்கும் Work from Home திட்டங்களிலின் விவரங்கள் இதோ:


ஏர்டெல்


Bharti Airtel-ன் Work from Home திட்டத்தின் ஆரம்ப விலை ரூ .251 ஆகும். VI, Jio-வின் ரீசார்ஜ் திட்டத்தில் கிடைப்பது போல இதிலும் 50GB தரவு கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டம் மீதமுள்ள திட்டங்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் இந்த தரவு திட்டம் வரம்பற்ற செல்லுபடியை வழங்குகிறது.


ALSO READ: Alert: தனது வாடிக்கையாளர்களுக்கு பல முக்கிய எச்சரிக்கைகளை விடுத்தது SBI


வோடபோன்


Vodafone Idea-வின் Work from Home திட்டத்தில் மூன்று வகையான பிளான்கள் உள்ளன. VI இன் ஆரம்ப ரீசார்ஜ் திட்டம் ரூ .251 ஆகும். இதில் 50GB தரவு கிடைக்கிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 351 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 56 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 100GB தரவு கிடைக்கிறது.


மூன்றாவது திட்டம் ரூ .355 இல் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில், 50GB தரவு 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் கிடைக்கிறது. இதனுடன் இலவச ZEE5 பிரீமியம் உறுப்புரிமையையும் நீங்கள் பெறலாம்.


ஜியோ


Work from Home-க்கான மூன்று திட்டங்களை Reliance Jio அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவின் ஆரம்ப ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ .151 ஆகும். இந்த திட்டம் 30GB தரவை வழங்குகிறது. ரூ 201 ரீசார்ஜ் திட்டத்தில் 40GB டேட்டாவும், ரூ .251 ரீசார்ஜ் திட்டத்தில் 50GB டேட்டாவும் கிடைக்கின்றன. இந்த மூன்று ரீசார்ஜ் திட்டங்களும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


ALSO READ: LIC: ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும், ஒவ்வொரு மாதமும் ₹.36000 பெறலாம்.!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR