கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' திரைப்படம் தயாராகவிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து இருக்கும் படம் 2.0. தற்போது இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படம் எடுக்க இருக்கிறார்.


அரசியல் களத்தில் இறங்கி உள்ள நடிகர் கமல், அவர் கைவசம் உள்ள படங்களையும் முடிக்க எண்ணியுள்ளார். இந்நிலையில் முதல் பாகத்தின் மெகாஹிட்டுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 


‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.


இந்நிலையில், படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு போலீஸ் கதாபாத்திரம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விசாரித்த போது “இச்செய்தி வதந்தியே” என்று தெரிவித்துள்ளனர்.