சமூக ஊடகங்கள், மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம், மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது என்றாலும், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெரியாத மொபைல் எண்களிலிருந்து பலருக்கு வீடியோ கால் வருகிறது என எச்சரித்துள்ள சைபர் போலீசார், இந்த வீடியோ அழைப்பை ஏற்றுக் கொண்டு பதிலளித்தால், பல சிக்கல்கள் ஏற்படும் எனவும், அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வீடியோ அழைப்பு மூலம் மக்கள் அச்சுறுத்தல் மற்றும் மோசடிகளுக்கு பலியாகி வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பரிச்சயமாகும் நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை என கூறியுள்ள சைபர் குற்ற பிரிவு போலீஸார், இது தொடர்பாக பல அச்சுறுத்தல், மோசடி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.  தெரியாத எண்களிலிருந்து வீடியோ அழைப்பு வரும் போது, அதை ஏற்றுக் கொண்டு பதிலளிக்கும் பலர் பிளாக் மெயில் செய்யப்படுவதாக கூறியுள்ளார். 


ALSO READ | Laptop வாங்க போறீங்களா; நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

இது தொடர்பான ஒரு சம்பவத்தில், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த 28 வயதான இளைஞர் ஒருவருவருக்கு,  தெரியாத எண் ஒன்றிலிருந்து வந்த ஒரு வீடியோ அழைப்பு வந்தது. வீடியோ அழைப்பை ஏற்றுக் கொண்ட உடனேயே, மொபைலில் ஒரு பெண்ணின்  ஆபாச படம் திரையில் தோன்றியது. அதிர்ந்து போன அவர் உடனேயே வீடியோ கால் அழைப்பை துண்டித்து விட்டார். 


அடுத்த நாள் அவரது எண்ணிற்கு,  கணக்கு விபரங்களுடன் கூகிள் பேவில் பணம் அனுப்ப வேண்டும் என தகவல் வந்தது. அதற்கு அந்த இளைஞர் மறுத்ததையடுத்து, அவரது ஆபாச வீடியோ வைரலாகிவிடும் என்று மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது போன்ற  ஏராளமான புகார்கள்  வருவதாக காவல்துறையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.


எனவே தெரியாத எண்ணிலிருந்து வரும் வீடியோ அழைப்பை துண்டித்து அதனை ப்ளாக் செய்யுமாறு, சைபர் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். மக்களை அச்சுறுத்தி, பணம் பறிப்பது மட்டுமே இந்த சைபர் குற்றவாளிகளின் நோக்கம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். 


ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR