கொரோனா தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். அதனால், மடிக்கணினிகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. வொர்க் ப்ரம் ஹோம் காலச்சாரத்திற்கு லாப்டாப் மிகவும் இன்றியமையானது
கொரோனா (Corona) காலத்தில் தற்போது லாப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து நிறுவனங்களும் புதிய அம்சங்களுடன் மடிக்கணினிகளை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. தொழில்நுட்பம் முன்னேறி வருவதன் காரணமாக, அனைத்து லேப்டாப்களும் ஸ்மார்டாக ஆகி வருகின்றன. நீங்கள் ஒரு மடிக்கணினி வாங்க திட்டமிட்ட்டிருந்தால், சில முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசிய. அப்போது தான் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த லாப்டாப்பை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்
முதலில், உங்கள் பட்ஜெட்டை நீங்கள் தீர்மானிக்க வேண்டும், வெவ்வேறு நிறுவனங்கள், சந்தையில் வெவ்வேறு விலையில் மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றன. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற மடிக்கணினியை தேர்வு செய்யலாம்.
அடுத்ததாக அதன் அளவை முடிவு செய்ய வேண்டும். சிலர் தனது தேவைகளுக்கு ஏற்ப சிறிய அளவிலான லாப்டாப்களை வாங்குகிறார்கள். சிலர் பெரிய அளவிலான மடிக்கணினிகளை வாங்க விரும்புகிறார்கள். அனைத்து அளவிலான மடிக்கணினிகள் சந்தையில் கிடைக்கின்றன, அவற்றில் உங்கள் தேவைக்கேற்ப வாங்கலாம். உங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய தேவை அதிகம் இருந்தால், நீங்கள் ஒரு நடுத்தர அளவிலான மடிக்கணினியை வாங்கலாம்.
அடுத்ததாக அதன் ப்ராசஸர் மற்றும் ரேம் என்ன என்பதை பார்க்க வேண்டும். எந்த ஒரு லாப்டாப்பின் வேகமும் செயல்திறனும் அதன் ப்ராசஸரை பொறுத்தது. உங்கள் லேப்டாப்பின் ப்ராசஸர் லேடஸ்டானதாக இருந்தால், அதிக செயலிகளை உபயோகிக்கும் வகையில் இருக்கும். இரண்டாவதாக, உங்கள் லேப்டாப்பில் அதிக ரேம் இருந்தால், அதன் செயல்திறன் சிறப்பாக இருக்கும். அதனால், மடிக்கணினி வாங்குவதற்கு முன், அதன் ப்ராசஸர் என்ன, எத்தனை ஜிபி (GB) ரேம் (RAM) உள்ளது என்பதைப் பாருங்கள்.
இறுதியாக, லேப்டாப்பில் எவ்வளவு சேமிப்பிடம் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமான தரவை அதில் சேமிக்க முடியும். தொழில்ரீதியான பயன்பாட்டிற்காக மடிக்கணினியை வாங்குகிறீர்களானால், அதிக சேமிப்பிடம் இருப்பதை வாங்க முயற்சிக்கவும். இது தவிர, பேட்டரி தரமும் சிறப்பானதாக இருக்க வேண்டும். லேப்டாப்பின் பேட்டரி நீண்ட நேர பேகப்புடன் அதிக நேரம் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால் சிறப்பு.
ALSO READ | வங்கி கடன் கொடுக்க மறுக்கிறதா? இதோ உங்களுக்கான Tips
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR