SBI வாடிக்கையாளர்கள் கவனம்! 30 செப்டம்பர் 2021 க்குள் ஆதார்-பான் இணைக்கவும்
`வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் பான் அட்டை செல்லாது என்று அறிவிக்கப்படும்.
Aadhaar-PAN Linking: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் பான் அட்டை செல்லாது என்று அறிவிக்கப்படும். இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று எஸ்பிஐ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒன்றிய அரசு "ஆதார் மற்றும் பான்" (Pan-Aaadhaar linking) ஆகியவற்றை இணைப்பதற்கான காலக்கெடு 30 செப்டம்பர் 2021 வரை நீட்டித்துள்ளது. சரியான நேரத்தில் ஆதார்-பான் இணைக்காத வாடிக்கையாளர்கள் தாமதமாக இணைப்பதற்காக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சரியான நேரத்தில் ஆதார் அட்டையை பான் அட்டையுடன் இணைப்பது நல்லது.
ALSO READ | Aadhaar புதிய அம்சம்: ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் பல பணிகளை செய்து முடிக்கலாம்
இந்த பணியை வெறும் மூன்று ஸ்டேப் மூலம் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல தேவையில்லை. உங்களுக்கு தேவையானது ஒன்றே மட்டுமே, அது உங்கள் வீட்டில் இன்டர்நெட் இருக்க வேண்டும். அது இருந்தால் சில நிமிடங்களில் உங்கள் பான் அட்டையை ஆதார் உடன் இணைக்க முடியும். இதற்காக நீங்கள் மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இதற்காக, நீங்கள் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.incometaxindiaefiling.gov.in/home செல்ல வேண்டும். இடதுபுறத்தில் உள்ள விரைவு இணைப்புகள் பிரிவில் உள்ள "இணைப்பு ஆதார்" (Link Aadhar) என்பதைக் கிளிக் செய்க. ஒரு புதிய இடைமுகம் உங்களுக்கு முன்னால் திறக்கப்படும், அதில் நீங்கள் பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் உள்ள உங்கள் பெயரை உள்ளிட வேண்டும்.
உங்கள் பிறந்த ஆண்டு மூலம் இணைக்கும் விருப்பத்தைத் தேர்வு செய்ய விரும்பினால், "எனக்கு ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே உள்ளது" என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ஆதார் இணைப்பைக் கிளிக் செய்க. இதைச் செய்தபின், உங்கள் முன் ஒரு உறுதிப்படுத்தல் பக்கம் திறக்கப்படும். அதில் உங்கள் பான் அட்டை ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும்.
ALSO READ | PAN Card Latest News: 5 நிமிடங்களில் இந்த தளத்திலிருந்து e-PAN-ஐ பதிவிறக்கம் செய்யலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR