PAN Card Latest News: இந்தியாவைப் பொறுத்தவரை பான் அட்டை மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இது இல்லாமல் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய இயலாது. ஒரு வங்கியில் கணக்கைத் திறக்கவோ, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் பெற்றுக்கொள்ளவோ, ஐடிஆர் தாக்கல் செய்யவோ, அனைத்துக்கும் பான் அட்டை தேவைப்படுகின்றது.
அனைத்து இடங்களிலும் தற்போது பான் அட்டை (PAN Card) கட்டாயமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் பான் அட்டை எங்காவது தொலைந்துவிட்டால், உங்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடும். ஆனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. வருமான வரித்துறையின் (Income Tax Department) புதிய வலைத்தளத்திலிருந்து உங்கள் மின் பான் அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின் பான் அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கான முழுமையான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
பான் எண் மூலம் இ-பான் பதிவிறக்கம் செய்வது எப்படி:
1. இதற்கு, நீங்கள் முதலில் வருமான வரி வலைத்தளமான https://www.incometax.gov.in/iec/foportal இல் லாக் இன் செய்ய வேண்டும்.
2. பின்னர் 'Instant E PAN'-ல் கிளிக் செய்யவும்.
3. அதன் பிறகு ’New E PAN' ஐக் கிளிக் செய்யவும்.
4. இப்போது உங்கள் பான் எண்ணை இங்கே உள்ளிடவும்.
ALSO READ:Link PAN: LIC பாலிசியுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயம்; இணைப்புக்கு சுலப வழி
5. உங்கள் பான் எண் உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், உங்கள் ஆதார் எண்ணை (Aadhaar Number ) உள்ளிடவும்.
6. இங்கே சில விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றை கவனமாகப் படித்துவிட்டு, 'Accept'-ல் கிளிக் செய்யவும்.
7. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிடவும்.
8. இப்போது கொடுக்கப்பட்ட விவரங்களைப் படித்த பிறகு 'Confirm'-ல் கிளிக் செய்யவும்.
9. இப்போது உங்கள் பான் உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு PDF வடிவத்தில் அனுப்பப்படும்.
10. இங்கிருந்து உங்கள் 'இ-பான்'-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாகும்
உங்கள் பான் எண் உங்களுக்கு நினைவில் இல்லை அல்லது அது குறித்த தெளிவு உங்களுக்கு இல்லை என்றால், உங்கள் ஆதார் அட்டையின் உதவியுடன் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் இதற்கு உங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது கட்டாயமாகும். உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் இ-பான் -ஐ பதிவிறக்கம் செய்ய முடியாது.
ALSO READ:Aadhaar Card News: ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR