கணவன் புடவை வாங்கி தராததால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், தனது கணவன் புடவை வாங்கி தராததால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பாரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் அமித் என்பவருக்கும் அஞ்சனா என்ற பெண்ணிற்கு கடந்த மே மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அந்த புதுமண தம்பதிகள் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அப்பொழுது அஞ்சனா தன் கணவரிடம் தன்னிடம் பழைய புடவைகளாக இருப்பதால் ஒரு புதிய புடவை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். 


அதற்கு அமீத் தன்னிடம் காசு இல்லை, இருக்கிற புடவையை வைத்து அனுசரிக்குமாறு கூறியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கடைசி வரை அமித் தனது மனைவிக்கு சேலை வாங்கி தரவேயில்லை. 


இதனால் மனமுடைந்த அஞ்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்குமார் கூறுகையில்; தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு இந்த கடுமையான நடவடிக்கையை எடுக்க பெண்ணை தூண்டியது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.