ஜம்மு காஷ்மீர் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று (புதன்கிழமை) திறம்பட நிறுத்தி வைக்கப்படபட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள, அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.


இதையடுத்து, இந்த வருட அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூன் 27-ம் தேதி பகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து துவங்கியது. இந்த யாத்திரையானது பால்டால் பகுதியில் இருந்து நடைபெற்று வருகிறது. அதேசமயம் கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.


இந்நிலையில், பால்டால் பகுதியில் உள்ள பிராரிமார்க் என்ற இடத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.