Tiger laughing: புலி என்றாலே வயிற்றில் புளி கரைக்கும் என்பது தானே இயல்பான விஷயம்? ஆனால், பயிற்சியாளர் கிச்சு கிச்சு மூட்டினால், சிரிக்கும் புலியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயிற்சியாளர் கிச்சு கிச்சு மூட்டினால், சிரிக்கும் புலியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. வெறும் 38 விநாடிகள் மட்டுமே கொண்ட வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் ஆச்சரியமே ஏற்படுகிறது. புலிக்கும் சிரிப்பு வரும் என்பது யாருக்குத் தெரியும்?



ஒரு குழந்தையைப் போல சிரித்து, குதூகலிக்கிறது புலி. ஒரு கட்டத்தில், பயிற்சியாளர் தனது கையை புலியின் வாய்க்குள் வைக்கிறார். அற்புதமான வீடியோவை பார்த்து ரசியுங்கள்:


புலி என்றாலே வயிற்றில் புளி கரைக்கும் என்பது தானே இயல்பான விஷயம். ஆனால், புலிக்கும் பல்வேறு உணர்ச்சிகள் உண்டு, என்பதை உணர்த்தும் அற்புத வீடியோ இது. இது பார்த்து சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் தூண்டும் வீடியோ.


Also Read | 5000 ஆண்டு பழமையான, 22,400 லிட்டர் பீர் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு


புலியைப் பற்றி நினைக்கும் போது, மூர்க்கமான விலங்கு, அதன் கொடூர கர்ஜனையையும் நினைத்தாலே அச்சம் ஏற்படும். அது கற்பனையாக இருந்தாலும், நேரில் புலியைப் பார்த்தால் பயத்தில் துள்ளி குதித்து ஓடிவிடுவோம். ஆனால் இந்த கம்பீரமான புலி, மனிதர்களைப் போலவே சிரிக்கவும் ரசிக்கவும் செய்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 


புலிக்கும் மனிதனுக்கும் இடையிலான அற்புதமான பிணைப்பைக் காட்டும் வீடியோவாக இது பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.



வைரல் வீடியோவில், ஒருவர் புலிக்கு வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். அப்போது புலியை தனது மடியில் படுக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனது வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டுவதை புலி ரசிக்கிறது, அனுபவிக்கிறது என்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.


Also Read | Master திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் ஆட்டம் வீடியோ Viral


கொடிய மிருகங்களைக் கூட அன்பால் அடக்க முடியும் என்பதைக் காட்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வீடியோவில் இருக்கும் மனிதர் சட்டை கூட அணியவில்லை, புலியுடன் மிகவும் நட்பாகவும், அதன் மீது அதிக நம்பிக்கையுடன் இருப்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.


இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களிலும், புலிகள் சிரிக்கும் வீடியோக்களும் படங்களும் வைரலாகியுள்ளன.   வனவிலங்கு புகைப்படக்காரர்களால் Instagram இல் பகிரப்பட்ட இவற்றையும் கண்டு ரசியுங்கள்.  


Also Read | Puducherry: கவர்னர் கிரண் பேடி நீக்கம்; தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR