Flipkart-க்கு போட்டியாக Amazon சலுகை விற்பனையை துவங்கியது!
Flipkart-க்கு போட்டியாக Amazon தனது சலுகை விற்பனையான `Great Indian Sale`-னை துவங்கியது!
Flipkart-க்கு போட்டியாக Amazon தனது சலுகை விற்பனையான "Great Indian Sale"-னை துவங்கியது!
இந்த தள்ளுபடி விற்பனை அக்டோபர் 24 துவங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வரை என 5 நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக Flipkart ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு 4 நாள் சலுகை விற்பனையான Festive Dhamaka Days-னை அறிவித்தது. அக்டோபர் 24 - 27 வரை நடைபெறும் இந்த சலுகை விற்பனைக்கு போட்டியாக mazon தனது சலுகை விற்பனையான "Great Indian Sale"-னை துவங்கியுள்ளது.
இந்த சலுகை விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்கள், முன்னனி நிறுவனங்களான ஆப்பில், ஒன்ப்லஸ, சாம்சங், பூமா, அடிடாஸ், வ்ராங்லர், டைட்டன், அமெரிக்கன் டூரிஸ்டர், வெரோ மோடோ, பிபிஎல், மைக்ரோ மேக்ஸ், லினோவோ, ஹெச் பி, பிலிப்ஸ், வெற்பூல், பஜாஜ், ப்ரிஸ்டீஜ், உஷா போன்றவற்றின் பொருட்களை சலுகை விலையில் பெறலாம் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த சலுகை விற்பனையில், ICICI மற்றும் Citi யூனியன் வங்கியின் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டை பயன்படுத்துவோர்க்கு, சுமார் 10% வரை கேஷ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது அமேசான்.
அதேப்போல், அமேசான் பே மூலம் ரூ.250 க்கு மேல் பொருட்களை வாங்குபவருக்கு ரூ.200 வரை கேஷ் பேக் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது!
இந்த சிறப்பு விற்பனையில், பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் மிக்பெரிய அளவிலான தள்ளுபடி விலையில் கிடைக்க வழிவகுத்துள்ளது Amazon. ஸ்மார்ட்போன்கள், மொபைல்கள், டிவிக்கள் மற்றும் உபகரணங்கள், மின்னணுவியல், தளபாடங்கள் மற்றும் பல பொருட்கள் இந்த சிறப்பு விற்பனையில் குறைவான விலையில் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே மூழ்கியுள்ளனர்.