உலகம் முழுவதிலும் 17 நாடுகளில் இயங்கியவரும் Amazon Prime Day ஆனது தற்போது இந்தியாவில் இரண்டாவது முறையாக மீண்டும் வந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட Amazon Prime Day விற்பனையில் கிட்டத்தட்ட 34 பிரத்தியேக பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்தாண்டு 200 பிரத்தியேக பொருட்கள் அறிமுகம் செய்யப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.


இந்த Amazon Prime Day சலுகை விற்பனையானது இந்தியாவில் நாளை ஜூலை 16 பிற்பகல் 12 மணியளவில் துவங்கி ஜூலை 17 நல்லிரவு 12 மணிவரை நடைபெறுகிறது.


பல பிரத்தியேக பொருட்கள் இந்த சலுகை விற்பனையில் அறிமுகம் ஆக உள்ளதால் பல்வேறு டீலர்களும் இந்த விற்பனையில் பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கு நல்ல போட்டியினை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த Prime Day சலுகை விற்பனையினை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு Prime சந்தாவினை பெற்றிருத்தல் அவசியமாகும். ரூ.129-னை செலுத்தி இந்த சந்தாவினை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த சந்தாவின் மூலம் வாடிக்கையாளர்கள் பிரத்தியேக வீடியோ, இசை கோப்புகள் மேலும் பல சலுகைகள் போன்றவற்றினையும் பெறலாம்.


கணினியின் உதவியால் இந்த சலுகையினை பயன்படுத்துவதை காட்டிலும் மொபைல் செயலியினைக் கொண்டு இந்த விற்பனையில் பங்கேற்பது சரியான தேர்வு என இணைய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.