கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கு ஒரு நற்செய்தி; போலி இரத்த கேப்ஸ்!!
பெண்கள் முதலிரவின்போது போலி கன்னித்தன்மை கொண்டுவருவதற்கான மாத்திரை தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது!!
பெண்கள் முதலிரவின்போது போலி கன்னித்தன்மை கொண்டுவருவதற்கான மாத்திரை தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது!!
இந்தியா மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் திருமணமான இரவு நடக்கும் முதலிரவு குறித்த விஷயங்கள் மறைக்கப்பட்டதாகவே இருக்கும். மக்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேசுவது இல்லை. இதனாலேயே இது குறித்துப் பல வதந்திகள் மற்றும் தெளிவின்மை மக்களிடம் இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் முதலிரவின்போது கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் எனப் பலர் எதிர்பார்க்கிறார்கள். சிலர் பழக்கங்களில் முதலிரவு முடிந்ததும் பெண் கன்னித்தன்மையுடன் இருந்தாரா என்று பரிசோதிக்கும் விநோத நடை முறைகள் கூட இருக்கின்றன.
கன்னித்தன்மை என்றால் முதன்முறையாக உடலுறவின்போது பெண்ணின் அந்தரங்க பகுதியிலிருந்து ரத்தம் வரும் அப்படி ரத்தம் வந்தால் அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறார் எனப் பலர் கருதி வருகின்றனர். ஆனால், மருத்துவம் அப்படிச் சொல்லவில்லை எல்லா பெண்களுக்கும் இவ்வாறு நடப்பது இல்லை. முக்கியமாக விளையாட்டு மற்றும் உடல் ரீதியாக அதிக உழைப்பில் இருக்கும் பெண்களுக்கு இப்படி முதல் உடலுறவின் போது ரத்தம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்படி ரத்தம் வராததால் அவர்கள் கன்னித்தன்மை முன்னரே இழந்துவிட்டார்கள் என அரத்தம் இல்லை என மருத்துவம் சொல்கிறது.
ஆனால் இந்தியாவில் இன்றும் நகரங்களில் கூட கன்னித்தன்மையை திருமணமான பெண்ணிற்கே தெரியாமல் சோதிக்கும் கொடுமை எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆன்லைனில் போலியாக மற்றவர்கள் நினைக்கும் கன்னித்தன்மையை வரவழைக்கும் மாத்திரை விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்து சமூகவலைத்தளங்களில் சில ஸ்கிரின் ஷாட்கள் வைரலாகியுள்ளன. அதன்படி இந்த மாத்திரை போலியான ரத்த பவுடர்களால் ஆனது. இதை முதலிரவிற்கு முன்பு பிறப்புறுப்பில் வைத்துக்கொள்வது மூலம் முதலிரவின் மூலம் போலியான ரத்தம் வரும் என விளக்கம் அளித்துள்ளது.