India's Richest Ganesh Temple : இந்தியா முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பணக்கார விநாயகர் கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா?. அந்த கோவிலில் இருக்கும் விநாயகர் சிலைக்கு அம்பானி குடும்பம் 20 கிலோ தங்கத்தை காணிக்கையாக கொடுத்திருக்கிறது. லோக்மத் டைம்ஸ் தகவலின்படி, அனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்த காணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அம்பானி குடும்பத்தின் இந்த காணிக்கை அந்த கோவில் விழாவை பிரம்மாண்டப்படுத்தியுள்ளது. அது சரி, கோவில் எங்கு இருக்கிறது என்ற கேள்வி எழலாம். மும்பையில் இருக்கும் லால்பாக்சா ராஜா விநாயகர் கோவில் தான் அது. இந்தியாவில் இருக்கும் மிகவும் பணக்கார விநாயகர் கோவில்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கோவிலுக்கு வருபவர்கள் எல்லாமே உலக கோடீஸ்வரர்கள். குறிப்பாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அம்பானி குடும்பத்தின் இஷ்ட கோவில் இதுதான். எந்தவொரு புது புராஜெக்டை தொடங்குவதற்கு முன்பும் அம்பானி குடும்பம் லால்பக்சா ராஜா விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். அதுவும் இந்த ஆண்டு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை மிக கோலாகலமாக நடத்தியிருக்கும் நிலையில், லால்பக்சா ராஜா விநாயகர் கோவிலுக்கு 20 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக கொடுத்திருக்கின்றனர். அத்துடன் ஓராண்டுக்கும் மேலாக பல கட்டங்களாக நடைபெற்று வரும் திருமண கொண்டாட்டத்தையும் இத்துடன் நிறைவு செய்துகொள்ள அம்பானி குடும்பம் முடிவெடுத்துள்ளது. 


மேலும் படிக்க | சிறு வயது குழந்தைகளுக்கு நரைமுடி வருகிறதா? கொஞ்சம் இதை டிரை பண்ணுங்களேன்


விநாயகர் சதூர்த்தி நாளில் லால்பக்சா ராஜா விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனிப்பட்ட பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது அம்பானி குடும்பம். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அம்பானி குடும்பத்தின் கடைசி திருமணமான ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவை உற்சாகமாக முடிக்க இருக்கின்றனர். இதனையொட்டி லால்பக்சா ராஜா விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற இருக்கிறது.  


லாக்பக்சா ராஜா விநாயகர் கோவில் திருவிழா விவரம்


மும்பை லால்பக்சா ராஜா விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்த்தி விழா சுமார் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை விநாயகர் சதூர்த்திவிழா கொண்டாடப்படுகிறது. 


லால்பக்சா ராஜா தரிசன நேரம்


தரிசனம்: 5:00 AM - 11:00 PM
காலை பூஜை: 6:00 AM - 7:00 AM
மதியம் பூஜை: 1:00 PM - 2:00 PM
மாலை பூஜை: 7:00 PM - 8:00 PM
காலை ஆரத்தி: 7:00 AM - 7:15 AM
மதியம் ஆரத்தி: 1:00 PM - 1:15 PM
மாலை ஆரத்தி: 7:00 PM - 7:15 PM


லால்பாக்சா ராஜா தரிசனத்தை நேரடியாக எங்கே பார்ப்பது?


அதிகாரப்பூர்வ இணையதளம்: lalbaugcharaja.com
YouTube சேனல்: youtube.com/user/LalbaugRaja
பேஸ்புக் பக்கம்: m.facebook.com/LalbaugchaRaja
Instagram பக்கம்: instagram.com/lalbaugcharaja
எக்ஸ் (முன்னர் ட்விட்டர்): twitter.com/lalbaugcharaja


மும்பை லால்பக்சா ராஜா பிரசாதம் ஆன்லைனில் பெறுவது எப்படி?


ஜியோ மார்ட், பேடிஎம் மூலம் மும்பை லால்பக்சா ராஜா விநாயகர் கோவில் பிரசாத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி... ஆனைமுகனின் அருளை பரிபூரணமாக பெற நீங்கள் செய்ய வேண்டியவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ