Grey Hair : சிறு வயது குழந்தைகளுக்கு கூட நரைமுடி வருவது இப்போது சாதாரணமாகிவிட்டது. முதுமையை உணர்ந்தும் நரைமுடி குழந்தைகளுக்கு வருவதற்கு மரபணுக்கள் அல்லது உணவுமுறைகள் காரணமாக இருக்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றால் மட்டுமே தெளிவான காரணம் தெரியும். அதேநேரத்தில் இந்த நரைமுடி தெரியாமல் இருக்க கடைகளில் விற்பனையாகும் ஹேர் டை வாங்கி வந்து அப்ளை செய்கிறார்கள். ஆனால் ஆயுர்வேத மருத்துவத குறிப்புகளை பின்பற்றினால் இளம் வயது நரைமுடியை வராமல் செய்ய முடியும். அவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நரைமுடியை தடுக்கும் ஆயுர்வேத மருத்துவம்
நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி, வல்லாரை மற்றும் கறிவேப்பிலை ஆகியவை முடி வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், முன்கூட்டியே முடி நரைப்பதை குணப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த கீரைகளை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் இவையெல்லாம் பொடியாகவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அந்த பொடிகளை வாங்கி வந்து தினமும் இரவு ஒரு ஸ்பூன் நெய்யுடன் சேர்ந்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | உடலுறவு... ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வைத்துக்கொள்ள வேண்டும்?
தலைக்கு குளித்தல் :
மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டும். அதற்காக அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டும். அப்போது ஹேர் மாஸ்குகளை பயன்படுத்துங்கள். செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, வேப்பம்பூ, நெல்லிக்காய், வல்லாரை ஆகியவை அடங்கிய மூலிகை எண்ணெய் வாங்கி வந்து பயன்படுத்துங்கள். உங்கள் தலைமுடியின் வகையை தெரிந்து அதற்கு உகந்த எண்ணெய் வாங்கி வந்து வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்து குளிக்கலாம்.
ஹேர் மாஸ்க் பயன்படுத்துதல்:
எண்ணெய் தடவுவது உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால், உங்கள் ஹேர்மாஸ்க்கில் செம்பருத்தி, வேம்பு, வல்லாரை, நெல்லிக்காய் மற்றும் கரிசலாங்கண்ணி இருக்க வேண்டும். முடியைக் கழுவுவதற்கு 30 நிமிடங்களுக்கு ஹேர் மாஸ்குகளை பயன்படுத்துங்கள். வாரத்திற்கு 2-3 முறை ஹேர்மாஸ்குகளை பயன்படுத்தவும்.
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் :
தினசரி ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். உங்கள் உணவில் கறிவேப்பிலை, எள், நெல்லிக்காய், பாகற்காய் மற்றும் பசு நெய் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் தூங்குவது மிகவும் அவசியம். உங்கள் தூக்கம் சிறப்பாக இருந்தால், உங்கள் தலைமுடி நன்றாக இருக்கும். இரவு 10 மணிக்குள் படுக்கைக்குச் செல்ல முயற்சிக்கவும். உங்கள் தலைமுடியை எப்போதும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
மேலும் படிக்க | சருமத்தை சாப்ட்டாக, பளபளப்பாக வைக்கணுமா... இந்த 5 ஜூஸ்களை குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ