கேரளா பெரும் பாதிப்புகளுக்கு நடுவில், நிச்சயமான தம்பதியருக்கு நிவாரண முகாமில் இரண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில், கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக வரலாறு கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரமாக கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், மின்சாரம், போக்குவரத்து, உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளிலும் சிக்கி கேரளா தவித்துவருகிறது. 


வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும் பாதிப்புகளுக்கு நடுவில், நிச்சயமான தம்பதியருக்கு நிவாரண முகாமில் இரண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது.


திருமண நிச்சயமான அனு மற்றும் சஜு என்ற தம்பதியர், மல்லப்புரம் நிவாரண முகாமில் தங்கியுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளா மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருமணத்தை தள்ளி வைக்க மணமக்கள் வீட்டார் முடிவு செய்திருந்தனர். எனினும், முகாமில் தங்கி இருந்த பொது மக்களின் ஆதரவால், மல்லப்புரம் அருகே உள்ள திரிபுந்திரா கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது


இதைப் போல, நிலம்பூர், திருநவயா முகாம்களிலும் வெள்ள பாதிப்புகளுக்கு நடுவே, திருமணங்கள் நடைப்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன


கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்து கனமழைக்கு, மல்லப்புரம் மாவட்டம் பெரிதும் சேதமடைந்துள்ளது. இதுவரையில், 183 முகாம்களில், 30,000க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...!