Hair Growth Amla Juice vs Aloe Vera Juice: தலைமுடி ஆரோக்கியம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் நீளமான தலைமுடியை வளர்க்கவே அதிகம் விரும்புகிறார்கள். நீளமாக வளர்ப்பது மட்டுமின்றி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளர்க்க பல்வேறு வழிகளை, வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவார்கள். ஆனால், இந்த சில வழிகள் எல்லோருக்கும் கைக்கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே, தலைமுடி வளர்ச்சி குறித்து உரிய நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதே நன்றாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஒருபுறம் இருக்க, தலைமுடி ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து மிக அவசியமாகும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து போதுமான அளவுக்கு கிடைக்கும்போது தலைமுடி இயற்கையாகவே வளரும். அது மிக மிக ஆரோக்கியமானதாகும். அப்படியிருக்க உணவு பழக்கவழக்கங்களிலும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள் ஆகியவற்றை சம அளவில் ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் எடுத்துக்கொள்ள வேண்டும். 


குறிப்பாக, தலைமுடி ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஆகியவை இன்றியமையாதது. இவற்றை நீங்கள் ஜூஸாக எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைத்து தலைமுடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இரண்டு ஜூஸ்களுமே தலைமுடி ஆரோக்கியத்திற்கு முக்கியமான பானங்கள் என்றாலும் எது அதிக நன்மைகளை தரும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. அதாவது, இரண்டில் ஒரு ஜூஸ்தான் சிறந்தது என கூற வேண்டும் என்றால் எதை சொல்லலாம் என்ற கேள்வி எழும். அப்படியிருக்க இரண்டின் நல்லது மற்றும் குறைபாடுகளை பார்ப்பதன் மூலம் எது சிறந்தது என முடிவு செய்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | வெறும் 2 ரூபாயில் கூந்தலை பளபளவென மினுமினுக்க வைக்கலாம்


நெல்லிகாய் ஜூஸின் நன்மைகள்


நெல்லிக்காய் ஜூஸ் (Amla Juice) என்பது பழங்காலத்தில் இருந்து பொடுகு தொல்லை, தலைமுடி வறட்சி, முடி கொட்டுதல் ஆகியவைக்கு நிவாரணமாக இருக்கிறது. நெல்லிகாயில் நிறைந்திருக்கும் வைட்டமிண் சி உடலில் கொலாஜன் உருவாக்கத்தை தூண்டும். எனவே, மயிர் கால்கள் வலுபெற்று, விரைவாக தலைமுடி வளரும். நெல்லிக்காய் ஜூஸில் ஆண்டிஆக்ஸிடன்ட் குணங்கள் நிறைந்திருப்பதால் தலைமுடியில் ஏற்படும் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை தடுக்கும். 


கற்றாழை ஜூஸின் நன்மைகள்


கற்றாழை ஜூஸ் (Aloe Vera Juice) உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்றாலும் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும். தலைமுடியை ஈரப்பதமாக வைக்கவும், தலைமுடி வேர் வரை நீர்ச்சத்துடன் வைக்கவும் உதவும். இதில் வைட்டமிண் A, C, E உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளதால் செல்கள் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். இதனால் தலைமுடி சீராகி பொடுகு தொல்லை நீங்கும். தலையில் அரிப்பு ஏற்படாது. 


மேலும் கற்றாழை ஜூஸில் ஆண்டிஆக்ஸிடன்ட் மற்றும் சர்க்கரை நோய், இதய நோய்களை தடுக்கும் உதவும் மூலக்கூறுகள் இருப்பதால் இவை கூடுதல் நன்மையை அலிக்கின்றனர். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் மட்டும் காணப்படும் beta carotene எனப்படும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்திருக்கின்றன. beta carotene-ஐ உங்கள் உடல் வைட்டமிண் A ஆக மாற்றும். இது கண் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக இருக்கும். 


நெல்லிக்காய் ஜூஸ் vs கற்றாழை ஜூஸ் - எது சிறந்தது?


இந்த இரண்டு ஜூஸ்களுக்கும் தனித்துவமான நன்மைகள் இருக்கின்றனர். உங்களுக்கு தேவை எது என்பதை அறிந்து அதை நீங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது பிரச்னைகளுக்கு ஏற்ப இவற்றை நீங்கள் அருந்தலாம். குறிப்பாக, தலைமுடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் ஜூஸை குடிக்கலாம். மென்மையான முடிக்கு கற்றாழை ஜூஸை குடிக்கலாம். 


(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ளவை பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிபடுத்தவில்லை)


மேலும் படிக்க | தினமும் 8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ