அமுல் பாலின் விலை 2 ரூபாய் அதிகரிப்பு... மே 21 முதல் அமல்...
இந்தியா முழுவதும் பால் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விற்பனை விலையை அதிகரித்து உள்ளது.
புது தில்லி: இந்தியா முழுவதும் பால் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விற்பனை விலையை அதிகரித்து உள்ளது.
அமுல் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இன்று (திங்கள்கிழமை) விலை உயர்வை குறித்து அறிவிப்பை அறிவித்தார். பாலின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை நாளை முதல் (மே 21) அமலுக்கு வருகிறது. அதாவது தற்போது எருமைப்பால் ஒரு பாக்கெட் (500 மி.லி) ரூ.27-க்கு கிடைக்கிறது. அது நாளை முதல் ரூ. 28 ஆக உயர்ந்து விடும். அதேபோல 21 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு பாக்கெட் (500 மி.லி) மாட்டுப் பாலின் விலை 22 ரூபாய் ஆகா உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலவி வரும் கோடைகால வெப்ப நிலையால் பால் உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் பால் உற்பத்தி குறைந்ததால், பால் உற்பத்தியாளர் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடிகளை சமாளிக்க விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் விலை அதிகரித்தது. பசுவின் பால் ஒரு கிலோ ரூ 4.5 எனவும், எருமைப் பால் (கொழுப்பு நிறைந்த) ஒரு கிலோ ரூ 10 எனவும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.