இணையதளத்தில் வைரலாகும் திருட்டு பைக் அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது, அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நம் மனதில் நீங்கா இடத்தை சில வீடியோக்கள் பிடிக்கும். அப்படி ஒரு வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  


மஹிந்திரா குழுமத்தின் தலைவராக ஆனந்த் கோபால் மஹிந்திரா அவர்கள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஹோ மனிதனே, இது நான் நீண்ட காலமாக பார்த்த மிகச் சிறந்த விஷயமாக இருக்க வேண்டும். நான் இன்னும் சிரிக்கிறேன். எனது வார இறுதி தொடங்கியது ..." என குறிப்பிட்டு அந்த வீடியோவை இணைத்துள்ளார்.  


கார்கள் மற்றும் பைக்குகள் திருட்டுபோவதை தடுக்க அவற்றில் திருட்டு எதிர்ப்பு அலாரங்கள் அடிப்பது நாம் அனைவருக்கும் தெரியும். நாம் அனுமதி இன்றி ஒரு காரைத் தொடும் போது, தானாக அலாரம் ஒலிக்க தொடங்கும். அந்த அலாரங்கள் மிகவும் சத்தமாகவும் எரிச்சலூட்டும் விதமாக ஒளியை எழுப்புவதால், நமது கார் அல்லது பைக்கை யாரோ  தொட்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். 


அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தெருவில் நிற்கும் சூப்பர் பைக் ஒன்றை எட்டி உதைக்கிறான். அந்த நேரத்தில் பைக்கில் இருந்து எச்சரிக்கை அலாரம் ஒழிக்க துவங்குகிறது. அந்த ஒலிக்கு ஏற்றவாறு அந்த சிறுவன் வேடிக்கையாக நடனமாட துவங்குகிறான். அவரின் நடனம் பார்பவர்கள் சிரிப்பில் ஆழ்த்தும் வகையில் வேடிக்கையாக உள்ளது. சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை ஒலி அணைந்ததும் தனது பொருட்களை கையில் எடுத்துகொண்டு வீட்டிற்கு செல்கிறான். 



இந்த வீடியோ இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இதுவரையில் சுமார் 14.5K பயனர் ரீ-ட்விட் செய்துள்ளனர். மேலும், 60.7 K பயனர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அவற்றில் சில கருத்துக்களை கீழே இணைத்துள்ளோம்.