அனந்த சதுர்தசி விரதத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மற்றும் பலன்கள்
Anant Chaturdashi 2022: அனந்த சதுர்தசி நாளில், மகாவிஷ்ணுவை பூஜித்து எல்லையற்ற நன்மைகளைப் பெறலாம். பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் உற்சவமும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது
அனந்த சதுர்தசி 2022: ஆவணி மாதத்தின் வளர்பிறாஇ சதுர்த்தசி திதியில் அனந்த் சதுர்தசி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அனந்த சதுர்தசி செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமையன்று வருகிறது. இந்த நாள் அனந்த் சௌதாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. அனந்த சதுர்தசி நாளில், மகாவிஷ்ணுவை பூஜித்து எல்லையற்ற நன்மைகளைப் பெறலாம். பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் உற்சவமும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அனந்த் சதுர்தசி விரதத்தை 14 ஆண்டுகள் தொடர்ந்து கடைபிடிப்பது முக்தியைக் கொடுக்கும் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.
அனந்த சதுர்தசி விரதம் கடைபிடித்து பயனடைந்தவர்கள்
பாண்டவர்கள் சூதாட்டத்தில் ராஜ்ஜியத்தை இழந்து காட்டில் தவித்துக் கொண்டிருந்த போது, பகவான் கிருஷ்ணர் அவர்களுக்கு அனந்த சதுர்த்தசி விரதம் பற்றி எடுத்துச் சொன்னார். அதை ஏற்றுக் கொண்ட பாண்டவர்கள், தங்கள் 14 ஆண்டு வனவாசத்தில் இந்த விரதத்தை கடைப்பிடித்து வந்தனர். இந்த விரதத்தின் பலனால் பாண்டவர்கள் மகாபாரதப் போரில் வெற்றி பெற்றனர்.
அதேபோல மன்னன் ஹரிச்சந்திரனும் இந்த விரதத்தை நோற்று, அதன் பலனாகத் தன் ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றார் என்கிறது புராணங்கள்.
மேலும் படிக்க | Vinayagar Chaturthi 2022: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல கவிதைகள்!
பழங்காலத்தில் சுமந்த் என்ற பிராமணன் இருந்தான். அவருடைய மனைவி பெயர் திக்ஷா. அவர்கள் இருவருக்கும் மிகவும் அழகான ஒரு மகள் இருந்தாள், அவள் பெயர் சுசீலா. சுசீலா வளர்ந்ததும், அவரது தாய் திக்ஷா இறந்துவிட்டார். அவரது மனைவி இறந்த பிறகு, சுமந்த், கர்காஷா என்ற பெண்ணை மணந்தார், கவுண்டின்ய ரிஷிக்கு தனது மகள் சுசீலாவை மணம் முடித்து வைத்தார்.
திருமணமானதும், சுசீலாவை வழியனுப்பும்போது சித்தி கர்காஷா, சில செங்கற்களையும் கற்களையும் கொடுத்து அனுப்பினார். கவுண்டினிய ரிஷியுடன் தனது புகுந்த வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, ஆற்றங்கரையில் பல பெண்கள் தெய்வ வழிபாடு செய்வதை சுசீலா பார்த்தார்.
இந்த நாளில் அனந்தரை வணங்குவதன் முக்கியத்துவத்தையும் அவரது விரதத்தைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் சுசீலா தெரிந்துக் கொண்டார். விரதத்தின் முக்கியத்துவத்தைக் கேள்வியுற்ற சுசீலை அங்கேயே சடங்குகளைச் செய்துவிட்டு, பதினான்கு முடிச்சுகளைக் கொண்ட ஒரு சரத்தை கையில் கட்டிக் கொண்டு கவுண்டினிய முனிவரிடம் வந்தாள்.
மேலும் படிக்க | ஏழரை சனியால் கஷ்டமா? எளிய பரிகாரம் இது
இதை அறிந்த சுசீலாவின் கணவர், இதை தவறு என்று சொல்லி, சுசீலாவின் கையில் இருந்த கயிற்றை எடுத்து நெருப்பில் எறிந்தார். இதற்குப் பிறகு அவரது சொத்துக்கள் அனைத்தும் வீணாகி, வறுமையில் வீழ்ந்ஹ்டார். வறுமைக்கான காரணம், அனந்த விரதத்தை தடுத்ததும் பழித்ததுமே என்று தெரிந்துக் கொண்ட முனிவர், தவமிருந்தார்.
அப்போது அனந்தப் பெருமான் தோன்றி, இத்தனை துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் அனந்த விரதத்தை இகழ்ந்தது தான். நீ தவம் செய்து, தவறை போக்கிக் கொண்டாய். தவத்தை ஏற்றுக் கொள்கிறேன். நீ இந்த விரதத்தை மேற்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க என்று வாழ்த்தினார். சுசீலா மீண்டும் அனைத்து வகை செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் தனது கணவருடன் வாழ்ந்தார்.
இந்த கதையை, பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்து கேட்டறிந்து, 14 ஆண்டுகள் அனந்த விரதத்தை மேற்கொண்டார், இதன் விளைவாக பாண்டவர்கள் மகாபாரதப் போரில் வெற்றிபெற்று னர். இதற்குப் பிறகுதான் அனந்த சதுர்த்தசி விரதத்தை கடைபிடிக்கும் வழக்கம் உலகில் தோன்றியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ