புதுடெல்லி: அதிகாலையில் துயில் எழுபவர்களுக்கு தூக்கத்தை கெடுக்கும் செய்தி ஒன்றை ஆய்வுகள் சொல்கின்றன. அனோரெக்ஸியா நெர்வோசா என்ற நோய் இருந்தால், காலையில் சீக்கிரமாக தூக்கம் கலைந்துவிடும் என்று சொல்லும் ஆய்வு சிலருக்கு ஆச்சரியத்தையும் பலருக்கு அதிர்ச்சியையும் தரலாம். அதிகாலையில் துயில் எழுப்பவர்களுக்கு அலர்ட் செய்யும் இந்த ஆய்வு என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகாலை துயில் எழுபவர்கள்


காலையில் சீக்கிரம் எழுபவராக இருப்பது அனோரெக்ஸியா நெர்வோசா வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கலாம்  என்று சொல்லும் ஆராய்ச்சி, குறைந்த எடை, உணவு கட்டுப்பாடு, உடல் தோற்றம் தொந்தரவு, எடை அதிகரிக்கும் என்ற பயம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் உணவுக் கோளாறுகளைப் பற்றியும் பேசுகிறது. அனோரெக்ஸியா நெர்வோசா மற்றும் தூக்கமின்மை ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.


அனோரெக்ஸியா நெர்வோசா


JAMA Network Open சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில், அனோரெக்ஸியா நெர்வோசா, மனச்சோர்வு, அதிக உணவு உண்ணும் கோளாறு மற்றும் ஸ்கிசோஃப்ரினியா போன்ற மாலை நேர அடிப்படையிலான பல கோளாறுகளைப் போலல்லாமல், ஆரம்பகால எழுச்சியை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் காட்டுகிறது.


மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்


உண்ணும் கோளாறுகளுக்கும் உடலின் உள் அமைப்பு அல்லது சர்க்காடியன் கடிகாரத்திற்கும் இடையே சாத்தியமான தொடர்பை ஆராய்ச்சி பரிந்துரைத்துள்ளது, இது தூக்கம் போன்ற பரந்த அளவிலான உயிரியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது.


மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் (international team of researchers led by investigators at Massachusetts General Hospital (MGH),) ஆய்வாளர்கள் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, அனோரெக்ஸியா நெர்வோசாவுடன் தொடர்புடைய மரபணுக்களுக்கும், க்ரோனோடைப் (chronotype, சீக்கிரம் எழுந்து சீக்கிரம் படுக்கைக்குச் செல்வது). தொடர்புடைய மரபணுக்களுக்கும் இடையே இரு வழி தொடர்பைக் கண்டறிந்தது.


மரபணு ஆபத்து மதிப்பெண்


அனோரெக்ஸியா நெர்வோசாவுக்கான "மரபணு ஆபத்து மதிப்பெண்ணை" உருவாக்குவதன் மூலம் தூக்கமின்மை இணைப்பை அவர்கள் மேலும் மதிப்பிட்டபோது, மரபணு ஆபத்து மதிப்பெண் உண்மையில் அதிக தூக்கமின்மை அபாயத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது.


மேலும் படிக்க | மனதையும் உடலையும் சோர்வாக்கும் பொட்டாசியம் குறைபாடு! இந்த அறிகுறிகள் இருக்கா?


"எங்கள் கண்டுபிடிப்புகள், பிற மனநோய்களுக்கு மாறாக காலைக் கோளாறு என அனோரெக்ஸியா நெர்வோசாவைக் குறிக்கிறது மற்றும் முந்தைய ஆய்வுகளில் காணப்பட்ட பசியின்மை மற்றும் தூக்கமின்மைக்கு இடையேயான தொடர்பை ஆதரிக்கிறது" என்று இந்த ஆய்வு கூறுகிறது.


அனோரெக்ஸியா நெர்வோசாவுக்கான சிகிச்சைகள் தற்போது குறைவாகவே உள்ளன மற்றும் தற்போதைய சிகிச்சைகள் 52 சதவீதம் வரை மீண்டும் இந்த சிக்கல் வருவதற்கான வாய்ப்புகலை அதிகம் கொண்டுள்ளன. கூடுதலாக, நோய்க்கான காரணம் இன்னும் தெளிவாக இல்லை.


அனோரெக்ஸியா நெர்வோசா மனநல நோய்களில் இரண்டாவது மிக உயர்ந்த இறப்பு விகிதத்தைக் கொண்டிருப்பதால், புதிய தடுப்பு உத்திகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து கூடுதல் ஆராய்ச்சி மிகவும் தேவைப்படுகிறது.


"எங்கள் புதிய கண்டுபிடிப்புகளின் மருத்துவ தாக்கங்கள் தற்போது தெளிவாக இல்லை; எவ்வாறாயினும், அனோரெக்ஸியா நெர்வோசா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான சர்க்காடியன் அடிப்படையிலான சிகிச்சைகள் பற்றிய எதிர்கால விசாரணைகளை எங்கள் முடிவுகள் வழிநடத்தக்கூடும்" என்று MGH இன் ஆராய்ச்சியாளர் முன்னணி ஆய்வ்வாளர் ஹன்னா வில்காக்ஸ் கூறினார்.


மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ