இரவோடு இரவு சருமம் ஜொலிக்கணுமா? கற்றாழையில் இதை கலந்து தடவவும்
Aloe Vera Benefits: கற்றாழையை நாம் பல்வேறு வழிகளில் சரும பராமரிப்பிறகு பயன்படுத்தலாம். எனவே உடனடியாக சருமம் பொலிவாக வேண்டுமானால் தூங்கும் முன் கற்றாழையை எப்படி தடவுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How to use aloe vera for clear face : கற்றாழையை சரும பராமரிப்பிற்கு பல வழிகளில் உபயோகிக்கலாம். ஏனெனில் காற்றாழையில் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை சருமத்திற்கு நன்மை தரும். கற்றாழையை முகத்தில் தடவினால் சருமம் மென்மையாகுவதுடன் வயதாவதை தடுக்கும் தன்மையும் கொண்டுள்ளது. கற்றாழையை தினமும் முகத்தில் சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்திற்கு ஒன்றல்ல பல நன்மைகள் கிடைக்கும். எனவே இரவு நேர சரும பராமரிப்பில் கற்றாழையை (Aloe Vera) எப்படி முகத்தில் தடவ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கற்றாழையை முகத்தில் எப்படி தடவுவது? | How To Apply Aloe Vera On Face
கற்றாழையை நாம் டைரக்ட்டாக முகத்தில் அப்ளை செய்யலாம். இதற்கு முதலில் ஃபிரெஷ் கற்றாழையை எடுத்து அதிலிருந்து ஜெல்லை தனியாக எடுத்து பின்னர் அதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவுவவும், இதனால் கட்டாயம் மறுநாள் காலை முகம் பளபளக்கும்.
மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்.. இதை மட்டும் சாப்பிட்டே தொப்பை கொழுப்பை குறைக்கலாம்
கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர்: கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து இரவு தூங்குவதற்கு முதலில் முகத்தில் தடவலாம். இது சருமத்தை பளபளப்பாக உதவும்.
கற்றாழை மற்றும் ஆரஞ்சு தோல்: ஆரஞ்சு பழத்தோலை உலர்த்திவும் பின்னர் அதை பொடியாகவும், அதன் பின்னர் கற்றாழை ஜெல்லில் ஆரஞ்சு தோல் பொடியை கலந்து ஃபேஸ் பேக் செய்து, இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் இரவு தூங்குவதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவி பின்னர் கழுவவும். சருமம் பளபளக்க ஆரம்பிக்கும்.
கற்றாழை மற்றும் தேன்: இந்த ஃபேஸ் பேக்கை பேக்கை தயார் செய்ய, முதலில் கற்றாழை ஜெல்லில் தேன் மற்றும் சிறிதளவு பால் கலந்து நன்கு பேஸ்ட் வடிவில் தயார் செய்துக்கொள்ளவும். பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் 10 நிமிடம் தடவி அதன் பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். குறிப்பாக வறண்ட சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்த பயனைத் தரும்.
முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை: இந்த பேக் தயார் செய்ய, முதலில் கற்றாழை ஜெல்லை சிறுது தண்ணீருடன் முல்தானி மிட்டியுடன் கலந்து நன்கு பேஸ்ட் வடிவில் தயார் செய்துக்கொள்ளவும். பின்னர் முகத்திலும் இந்த பேக்கை நன்கு தடவவும். சுமார் 15-20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கற்றாழை மற்றும் மஞ்சள்: இரவில் கற்றாழையுடன் ஒரு சிட்டிகை மஞ்சளைச் சேர்த்து முகத்தில் தடவினால் மறுநாள் காலை சருமம் பொலிவு பெரும். நீங்கள் விரும்பினால், இந்த பேஸ்ட்டை இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை கழுவலாம். இதன் மூலம் முகத்தில் ஒரு பொலிவு கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஈசி வழி: இரவில் இப்படி, இதை சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ