உடல் எடை கன்னாபின்னானு ஏறுதா? கற்றாழை சாறை இப்படி குடிச்சா உடனே குறையும்

Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2024, 10:56 AM IST
  • கற்றாழை சாறுடன் நெல்லிக்காய் சாறு.
  • கற்றாழை சாறு மற்றும் எலுமிச்சை சாறு.
  • கற்றாழை சாறு மற்றும் சியா விதைகள்.
உடல் எடை கன்னாபின்னானு ஏறுதா? கற்றாழை சாறை இப்படி குடிச்சா உடனே குறையும்

Weight Loss Tips: 'சுவர் இல்லாமல் சித்திரம் எழுத முடியாது’ என ஒரு பழமொழி உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பொருந்தும். நம் வாழிவில் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என நாம் பல வித ஆசைகளை கொண்டிருக்கிறோம். இதற்காக பணம் சேர்க்கிறோம், பல திட்டங்களை தீட்டுகிறோம். ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறோம். ஆம்!! நம்மிடம் எவ்வளவு பண பலமும், ஆள் பலமும் இருந்தாலும், நமது திட்டங்கள் எத்தனை கச்சிதமாக இருந்தாலும், உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்கவில்லை என்றால் நம்மால் ஒரு சிறு வேலையை கூட செய்ய முடியாது. நம் கனவுகளை நிஜமாக்க நாம் ஃபிட்டாக இருப்பது மிக அவசியம். இன்றைய காலகட்டத்தில் நம் உடல் ஆரொக்கியத்திற்கு பெரும் பாதகத்தை விளைவிப்பது உடல் எடை அதிகரிப்பு.

Add Zee News as a Preferred Source

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் உடல் பருமனால் (Obesity) அவதிப்படுகின்றனர். அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த மக்கள் பல வழிகளை முயற்சி செய்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.  எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் (Weigt Loss). அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்க கற்றாழை சாறு (Aloe Vera Juice For Weight Loss)

உட்ல எடையை குறைக்க கற்றாழை பல வழிகளில் உதவியாக இருக்கும். பலர் எண்ணுவது போல கற்றாழை சருமம் மற்றும் கூந்தலுக்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை. இதனால் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுகின்றன. அதில் ஒன்றுதான் எடை இழப்பு. உடல் பருமனை குறைக்க கற்றாழையை எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் காணலாம். 

கற்றாழை சாறு

கற்றாழையில் பருமன் எதிர்ப்பு குணங்கள் பல உள்ளன. இவை உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை அகற்ற பெரிதும் உதவுகின்றன.  இவை தொப்பை கொழுப்பை (Belly Fat) எளிதில் எரிக்க உதவியாக இருக்கின்றன. இதுதவிர, கற்றாழையில் உடலுக்கு பல நன்மகளை அளிக்கும் ஆண்டிஆக்சிடெண்டுகளும் உள்ளன. 

மேலும் படிக்க | Bad Combo: அசைவ உணவுகளுடன் சாப்பிட்டால் ஹார்மோன்களை சீர்குலைக்கும் உணவுகள்!

கற்றாழை சாறு (Aloe Vera Juice) குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி, உடல் எடை குறைகிறது. விரைவான எடை இழப்புக்கு கற்றாழை சாறுடன் சில பொருட்களை சேர்த்து குடிக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கற்றாழை சாறுடன் நெல்லிக்காய் சாறு

உடல் எடையை குறைக்க கற்றாழை சாறுடன் நெல்லிக்காய் சாறை (Amla Juice) கலந்து குடிக்கலாம். இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து வேகமாக கொழுப்பு எரிகிறது. இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 ஸ்பூன் கற்றாழை சாறு மற்றும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் சாறு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

கற்றாழை சாறு மற்றும் எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் (Lemon Juice) வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகின்றது. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க கற்றாழை சாறையும் எலுமிச்சை சாறையும் கலந்து குடிக்கலாம். இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில், இரண்டு ஸ்பூன் கற்றாழை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். தேவைப்பட்டால், இதில் சிறிது தேனும் சேர்க்கலாம். சரியான முறையில் இதை குடித்து வந்தால் சில நாட்களில் உடல் எடை குறையும்.

கற்றாழை சாறு மற்றும் சியா விதைகள்

எடை இழக்க சியா விதைகளும் (Chia Seeds) உதவும். கற்றாழை சாறில் சியா விதைகளை சேர்த்து சாப்பிட்டால், உடலில் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு சிறிது சிறிதாக குறையத் தொடங்கும். சியா விதைகள் பசியையும் கட்டுப்படுத்தும்.

இதை செய்ய ஒரு கிளாஸ் கற்றாழை (Aloe Vera) சாறில் சியா விதைகளை போட்டு 1 முதல் 2 மணி நேரம் வரை ஊறவைக்கவும். காலையில் இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் சில நாட்களில் உடல் எடை குறையத் தொடங்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நூறு மருந்துகளுக்கு சமமான வாதுமை பருப்பு... வியக்க வைக்கும் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News