ஏப்ரல் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும்
ஏப்ரல் மாதம் 4 ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பயணங்களால் நல்ல பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள்
ஏப்ரல் 2022 ராசிபலன்: 2022 ஆம் ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல் பல ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் இந்த மாதம் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகிறது. ஏப்ரல் மாதத்தில் குரு, சனி, ராகு-கேதுவின் ராசி மாற்றங்கள் சிறப்பாக இருக்கும். ஏனெனில் இந்த மூன்று கிரகங்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு ராசியை மாற்றும். இதுதவிர புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் சாதகமான விளைவைக் கொடுக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பயணங்களால் நல்ல பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தலாம். மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். கடின உழைப்பின் முழுப் பலன் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | குரு உதயத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்களின் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதிர்ஷ்டம் எல்லாவற்றிலும் உங்களை ஆதரிக்கும். புதிய பொறுப்புகளும் கிடைக்கும். சில நல்ல செய்திகள் கேட்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும்.
சிம்மம்: இந்த மாதம் உங்களின் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த மாதம் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதிர்ஷ்டம் உங்களுடன் வரும். புதிய வேலை தொடங்கும் திட்டம் இருக்கலாம். முதலீடு செய்வதற்கு நேரம் மிகவும் சாதகமானது.
தனுசு: துறையில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சம்பளமும் அதிகரிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். எங்கிருந்தோ திடீரென்று பணம் வரலாம். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதே நடக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR