ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராசிகள் மற்றும் நட்சத்திரங்களைத் தவிர கிரகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த கிரகம் இருப்பதால், ராசியின் அடிப்படையில் பல நல்ல குணங்களும் தீய குணங்களும் மனிதர்களிடம் காணப்படுகின்றன.
அதிபதி கிரகத்தின் தன்மை மற்றும் குணங்களின் தாக்கம் ராசியுடன் தொடர்புடைய நபரிடம் காணப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளின் அதிபதி கிரகங்கள் உக்ர கிரகங்களாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கும் பிறப்பிலிருந்தே கோபம் அதிகமாக இருக்கும். இந்த பழக்கத்தை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த கோபம் அதிகமாகி, அதன் காரணமாக அந்த நபர் தனக்குத்தானே தீங்கு விளைவித்துக்கொள்ளும் நிலைமையும் வரக்கூடும்.
மேஷம்
இந்த ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று கூறப்படுகிறது. இது நெருப்பின் சுபாவமுள்ள கிரகம். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு கோபம் அதிகமாக உண்டாகும். செவ்வாய் வீரம் மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது.
இதனால் மேஷ ராசிக்காரர்களும் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்த வேலையை செய்யவும் அச்சப்பட மாட்டார்கள். இவர்களுக்கு ஈகோ பிரச்சனையும் அதிகமாக இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் கோவப்பட்டால், இவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமாகி விடும்.
சிம்ம ராசி
சிம்மம் என்பது நெருப்பின் உறுப்பு, அதன் அதிபதி சூரியன். சிம்ம ராசிக்கார்ரகள் சூரியனைப் போல பிரகாசமாக இருப்பார்கள். இவர்கள் பொதுவாக சுதந்திரமான மனநிலையுடன் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், அங்கு தங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
எனினும், சிம்ம ராசிக்கு கோபம் அதிகமாக வரும். கோபத்தின் காரணமாக, அவர்கள் சில சமயங்களில் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக்கொள்கிறார்கள்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை: இவங்களுக்கு இன்று லவ், நாளை பிரேக் அப்
தனுசு
தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான் ஆவார். இதனால் இவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு கல்வியில் அதிக நாட்டம் இருக்கும். பல விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இதனால் இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருப்பார்கள், மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பார்கள்.
எனினும், இவர்களது ராசியானது நெருப்பு உறுப்பின் தாக்கத்தில் இருப்பதால், இவர்களுக்கு அதிகமாக கோவம் வரும். இவர்கள் ஒரு விஷயத்தில் கோபப்பட்டால், அவர்களை சமாதானப்படுத்துவது எளிதல்ல. புத்திசாலியாக இருப்பதால், அவர்களுக்கு அபாரமான தர்க்க சக்தியும் உண்டு. கோபத்தின் காரணமாக, இவர்கள் சில நேரங்களில் பிறருடம் உள்ள தங்கள் சொந்த உறவுகளை கெடுத்துக் கொள்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை மிகவும் முக்கியமான விஷயமாகும். மரியாதைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். யாராவது தங்கள் தன்மானத்தை புண்படுத்தினால், அவர்கள் கோபத்தின் எல்லைக்கே சென்று விடுவார்கள். இவர்கள் யாரிடமாவது கோபித்துக் கொண்டால், அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்த பின்னர்தான் ஓய்வார்கள். இதனால், பல சமயங்களில் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மார்ச் 12ம் தேதி இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் பணவரவும் உண்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR