நீரிழிவு நோய் ஆபத்து! ஏஆர் ரகுமான் வைத்த முக்கிய வேண்டுகோள்..!
A.R. Rahman | உலக நீரிழிவு நோய் தினத்தில் மக்கள் அனைவருக்கும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
A.R. Rahman, Diabetes | நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் முக்கிய கோரிக்கை ஒன்றை மக்களிடம் வைத்திருக்கிறார். நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களும், அந்த நோய் ஆபத்தில் இருப்பவர்களும் உடனடியாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீரிழிவு நோய் இந்தியாவில் பெரும் சுகாதார பிரச்சனையாக மாறியிருக்கிறது. சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பில் உள்ளனர். பலர் இந்த நோய் வருதற்கான காரணிகளுடன் இருக்கின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சராசரியாக வீட்டுக்கு ஒருவர் நீரிழிவு நோய் பாதிப்பில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் பச்சிளம் குழந்தைகளும் அடக்கம். பிஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும் நீரிழிவு நோய்க்கு பல்வேறு காரணிகள் சொல்லப்படுகிறது. மரபணு, மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை, தூக்கமின்மை என பல காரணங்களால் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் கூடவே உயர் ரத்த அழுத்தம், கிட்னி பிரச்சனை, குடல் பிரச்சனை, இதய நோய் பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | நெய் vs ஆலிவ் எண்ணெய்... இரண்டில் எது பெஸ்ட்.... நிபுணர் கூறுவது என்ன
இதில் இருந்து மீள வேண்டுமானால் முன்கூட்டியே மருத்துவர் ஆலோசனை பெற்று வாழ்க்கை முறை மாற்றங்களை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வது இயலாத ஒன்றாகிவிடும். இந்த சூழலில் தான் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் முக்கிய கோரிக்கை ஒன்றை மக்கள் இடத்தில் வைத்திருக்கிறார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், "நண்பர்களே!, நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் - நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள்.
நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும். ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி: வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவலாம்.
இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும் ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம். நன்றி" என கூறியுள்ளார். கண்களை பாதுகாத்துக் கொள்ளவும், முன்னெச்சரிக்கையாக இருக்கவும் அவர் அந்த விழிப்புணர்வு பதிவை பதிவிட்டுள்ளார். உண்மையில், நீரிழிவு நோய் கண் முதல் கிட்னி, இதயம் என வரிசையாக பல உறுப்புகள் பாதிப்புக்கு வித்திடுகிறது. அதனால், நீரிழிவு நோய் மட்டும் வந்துவிட்டால் அசால்டாக இருந்துவிடவே கூடாது. தினசரி விழிப்புடன் இருந்தால் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.
நீரிழிவு நோய் அறிகுறிகள்
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் திடீர் எடை இழப்பு, நீங்காத சோர்வு, மங்கலான கண்பார்வை, அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய பிரச்சனைகள் எதிர்கொள்வீர்கள். அதனால் இத்தகைய அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குடல் பிரச்சனை தீர்வு! இந்த 3 உணவுகள் சாபிட்டால் மலச்சிக்கல், வாயு இருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ