அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனம் எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போதுதான் முகமும் பொலிவுறும். பெரியவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவது இயல்புதான். ஆனால் தற்காலத்தில் குழந்தைகளுக்கே மனச்சோர்வு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி ஏற்படும் மனச்சோர்வை ஒருசில உணவுப்பொருட்களை உட்கொண்டே குறைத்து, குழந்தைகளை குஷிப்படுத்தலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாக்லேட்:


மனச்சோர்வு குறைய சாக்லேட் ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டி-டிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும்போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்டமின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைக்கும். 


பாதாம் பருப்பு:


அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு வரும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. 


மேலும் படிக்க | 1 மாதத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க இதை செய்தால் போதும்


கடல் உணவுகள்:


கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதோடு, புத்துணர்ச்சியும் பெறும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.


மேலும் படிக்க | அழகிற்கு அழகூட்டும் கறிவேப்பிலையின் கருகரு கூந்தல் மந்திரம்!


பால்:


குழப்பமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளின் உணவில் பால் அல்லது பால் சம்பந்தமான பொருளான தயிரை அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.


மேலும் படிக்க | இரவில் ஊறவைத்து காலையில் இதை சாப்பிடுங்கள்: நோய்கள் எல்லாம் ஓடியே போகும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ