1 மாதத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க இதை செய்தால் போதும்

உடல் பருமனால் பல நோய்கள் வரலாம். எனவே சில டிப்ஸ்களை பின்பற்றி ஒரு மாதத்தில் தொப்பையை எளிதாக நீங்கள் குறைக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 22, 2022, 04:43 PM IST
  • எடை குறைப்பு ரகசியங்கள்
  • தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைப்பது
  • தொப்பை 1 மாதத்தில் குறையும்
1 மாதத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க இதை செய்தால் போதும் title=

வயிற்றை சுற்றி கொழுப்பு இருந்தால் அவை நமக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். அதே சமயம் தொப்பை அதிகரிப்பதால் விருப்பமான ஆடைகளை அணிய முடிவதில்லை. இதுமட்டுமின்றி உடல் பருமனால் நீங்கள் பல நோய்களுக்கு பலியாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஜிம்மிற்குச் சென்று மணிக்கணக்கில் வியர்வை சிந்தவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் ஒரு மாதத்தில் தொப்பையைக் குறைக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே நாங்கள் கொண்டுவந்துள்ளோம், அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

இந்த வழிகளில் தொப்பையை குறைக்கவும்

நடனத்தின் உதவியால் தொப்பையைக் குறைக்கலாம்
தொப்பை கொழுப்பு என்பது மக்களை மிகவும் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனையாகும். தொப்பை கொழுப்பு என்பது உங்கள் இடுப்பைச் சுற்றி இருக்கும் கொழுப்பு. அதிகரிக்கும் தொப்பை கொழுப்பால், கொலஸ்ட்ரால், உயர் BP, போன்ற கடுமையான நோய்களுக்கு நீங்கள் பலியாகலாம். அதனால்தான் தொப்பையை கரைப்பது மிகவும் அவசியம். இதற்கு நீங்கள் கலோரி உட்கொள்ளலைக் கண்காணிக்க வேண்டும் மற்றும் அதிக கலோரிகளை எரிக்க வழக்கமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்

மறுபுறம், உங்கள் தொப்பை வளந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் நடனமாடலாம், இதைச் செய்வதன் மூலம் உங்கள் முழு உடலும் உடற்பயிற்சி செய்து தொப்பை குறைக்க உதவும்.

தினமும் சைக்கிள் ஓட்டுங்கள்
ஜிம்மிற்கு செல்லாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமானால், சில நாட்களில் உங்கள் தொப்பை கொழுப்பை வெண்ணெய் போல் கரைத்துவிடும், இதற்கு சைக்கிள் ஓட்ட ஆரம்பியுங்கள். இதைச் செய்ய நீங்கள் எந்த நேரத்தையும் தேர்வு செய்யலாம். 

மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம் 

தினமும் க்ரஞ்சஸ் செய்யுங்கள்
தொப்பை கொழுப்பை குறைக்க மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி க்ரஞ்சஸ் ஆகும். தொப்பையை குறைப்பது பற்றி பேசும் போது, ​​க்ரஞ்சஸ் உடற்பயிற்சி தான் முதலிடத்தில் உள்ளது. எனவே இந்த பயிற்சியை தினமும் செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அழகான சருமத்திற்கு அற்புத பலன் அளிக்கும் ஐந்து பொருட்கள்! தேங்காயின் அழகு வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News