இரவுநேர பணிக்கு செல்குறீர்களா? அப்போ கண்டிப்பா இத கடைபிடிங்க!
இரவுநேர வேலையை தொடங்குவதற்கு முன்னர் ஒரு குட்டித்தூக்கம் போடுவதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
பலவகையான அலுவலகங்களிலும் தற்போது இரவுநேர பணிகள் செயல்படுத்தப்படுகிறது. பணிபுரியும் ஊழியர்கள் நிச்சயம் இதிலிருந்து தப்பித்துவிட முடியாது, பலரும் இரவுநேர பணியென்றாலே சலிப்படைவார்கள். பெரும்பாலான பணியாளர்கள் இரவுநேரத்தில் பணிபுரிவதைவிட, பகல் நேரத்தில் பணிபுரிவதை தான் விரும்புகிறார்கள். நமது கால சூழ்நிலையும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது, ஏனெனில் காலை நேரத்தில் தான் நமது உடல் புத்துணர்வுடன் இருக்கும், இரவு நேரம் தூங்கும் நேரம் என்பதால் காலை நேரத்தில் இருக்கும் ஒருவித புத்துணர்வு இரவு நேரத்தில் நம்மிடம் இருக்காது.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுப் பொருட்கள்
இதற்காக இரவுநேர பணியை செய்யாமல் இருக்கமுடியாது, எப்படியாக இருந்தாலும் நாம் நமது பணியை செய்துதான் ஆகவேண்டும். நீங்கள் சில எளிமையான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் இரவுநேர பணியை நீங்கள் இனிமையாக மாற்றிக்கொள்ளலாம். இரவுநேர பணியை தொடங்குவதற்கு முன்னர் நல்ல இளம் சூடான நீரில் குளித்துவிட்டு ஃபிரஷ் ஆக செல்லும்போது பணிபுரிய நேரம் முழுவதுமே புத்துணர்ச்சியாக இருக்கும். அதோடு வேலையை வேகவேகமாக செய்ய தொடங்கிவிடாமல் முதலில் உங்கள் வேலையை மெதுவாக செய்ய ஆரம்பிக்க வேண்டும், அதன் பின்னர் செய்யும் வேளையில் வேகத்தை கூட்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் தான் விரைவில் நீங்கள் சோர்வடையாமல் இருக்கலாம்.
நீங்கள் வேலை பார்க்கும் அறையானது பகல் போல வெளிச்சமாக இருக்க வேண்டும், அந்த அளவிற்கு விளக்குகள் பிரகாசமாக இருக்க வேண்டும் மனைகளான ஒளியில் இரவு நேரத்தில் வேலை பார்ப்பது கண்களுக்கு கேடு விளைவிக்கும். அதேபோல இரவுநேர பணியை முடித்துவிட்டு நீங்கள் உறங்க செல்லும் அறையானது அடர்ந்த இருட்டாக இருக்க வேண்டும், அதுதான் நல்ல நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும் பணிக்கு செல்வதற்கு முன்னர் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஒரு குட்டித்தூக்கம் போடலாம், அவ்வாறு செய்யும்போது உங்கள் தசைகள் மற்றும் கண்கள் இலகுவாகி புத்துணர்வுடன் வேலையை செய்ய உதவிபுரியும்.
அதனையடுத்து வீட்டிலிருந்து பணிபுரிபவர்களாக இருந்தால் பிரச்சனையில்லை, அதுவே அலுவலகத்தில் பணிபுரிபவர்களாக இருக்கும்பட்சத்தில் இரவுநேர வேலை முடிந்து நீங்கள் உங்கள் இருப்பிடத்திற்கு திரும்பும்பொழுது முடிந்தவரை வாகனத்தை நீங்களே ஓட்டிச்செல்வதை தவிர்க்க வேண்டும், கூடுமானவரை பொது போக்குவரத்து அல்லது அலுவலகம் சார்பாக இயங்கும் வாகனகளையே பயன்படுத்துவது நல்லது. மேலும் விடுமுறை நாட்களில் நீங்கள் வேலைக்கு செல்லவேண்டியதிருந்தால் இதுவரை எப்படி ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையை பின்பற்றி பணிபுரிந்தீர்களோ அவ்வாறே அதனை பின்பற்றி செயல்பட வேண்டும்.
மேலும் படிக்க | பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR