பெற்றோர்களால் அல்லது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்பது பழமையான கருத்தாகத் தோன்றலாம், இது நவீன கால டிரெண்டிற்கு மாறானது என்றும் கூறப்படுகிறது. ஆனால், சுவாரஸ்யமாக, இந்தியாவில் 'அரேன்ஜ் மேரேஜ்' முறை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. குறிப்பாக இதற்கு அதிக தேவை உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிர சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு உங்களுக்காக உங்கள் குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறந்த நபரை திருமணம் செய்துகொள்வது தான் 'அரேன்ஜ் மேரேஜ்' என்பார்கள். காதல் திருமணங்கள் அதிகரித்த போதிலும், இதன் மீதான மோகம் மறைந்துவிடவில்லை. 
நிச்சயமாக, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்ற கருத்து சற்று மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. 


இன்று பெற்றோர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்துகொள்ளும் அவர்களின் பிள்ளைகளும் தங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தங்களின் கருத்தையும் வெளிக்காட்டி வருகின்றனர். கடந்த காலங்களில் இந்த போக்கை பெருமளவில் நீங்கள் பார்க்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான எதிர்கால வரனை தேர்வு செய்யும் செயல்பாட்டில் இருந்தாலும், இறுதியில் அதனை முடிவு செய்யும் பொறுப்பு அவர்களின் மகன்/மகளிடம் தான் தற்போது அதிகம் உள்ளது. 


MatchMe என்ற மேட்ரிமோனி நிறுவனத்தின் இணை நிறுவனர்களான மிஷி சூத் மற்றும் தானியா சோந்தி ஆகியோர் இதுகுறித்து நம்மிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அதில்,"நீங்கள் எங்கிருந்து வந்தாலும், குடும்ப விருந்துகளில் பெரியவர்கள் வாழ்க்கைப் பாடங்களைச் எடுத்துக்கொள்வது என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். 


மேலும் படிக்க | பிரேக் அப் பண்ண பிளான் பண்றீங்களா... இதோ இந்த 7 டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்!


குறிப்பாக திருமணமாக உள்ளவர்களை நோக்கி அவர்களின் ஆர்வம் அதிகம் இருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லுவது குறித்து கவலைப்படுகிறார்கள். வேலை உள்ளிட்ட பொறுப்புகளில் வெற்றிகரமாக உள்ள 90s கிட்ஸ், பயணம் மேற்கொள்வதிலும், டேட்டிங் ஆப்ஸ்களை பயன்படுத்தவதன் மூலம் புதிய நபர்களுடன் பழகவும் மும்முரமாக இருப்பதால், தங்களின் திருமணம் குறித்த ஆர்வத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உலகில் உள்ள பழைய விதிகள் தங்களுக்குப் பொருந்தாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். 


தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் வரையிலும், அவர்கள் தங்களின் வாழ்க்கை துணையாக தீவிரமாகப் பரிசீலிக்கக் கூடியவர் யாரும் இல்லை என்ற நிலை வரும் வரையிலும் அவர்கள் இப்படி இருப்பார்கள். இந்த கட்டத்தில், தங்களை சுற்றி வேலி அமைத்துக்கொள்பவர்களும், கமிட்மெண்ட்டுக்கு பயப்படுபவர்களும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழலை நோக்கி தள்ளப்படுகிறார்கள். அதுதான் திருமணத்திற்கான நேரம், இதன்மூலம் நீண்ட கால உறவை வரவேற்க அவர் தயார் ஆகின்றனர்.


உலகின் பல சிறந்த டேட்டிங் ஆப்ஸ் மற்றும் இணையதளங்களின் ஆராய்ச்சியின்படி, ஆன்லைனில் டேட்டிங் செய்பவரின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. உடல் மற்றும் மேலோட்டமான பண்புகளின் அடிப்படையில் எந்தவொரு நபரையும் டேட்டிங் ஆப்பில் வலது புறம் ஸ்வைப் செய்வதற்குப் பதிலாக, பயனர்கள் அதிகளவில் எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள்.


காதல் உறவில் மெதுவாக நகர்கிறார்கள் மற்றும் அவர்களின் முக்கிய மதிப்புகளுடன் வழிநடத்துகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு அவர்கள் தற்போதைய 'அரேஞ்ச் மேரேஞ்' செயல்முறைக்கு ரெடி ஆகின்றனர். அங்கு அறிமுகமானது குடும்பங்கள் மூலமாக இருந்தாலும், மற்ற நபரை அறிந்து கொள்ளவும், அவர்களின் இணக்கத்தைப் பார்க்கவும் அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். 


பெற்றோர்களும் இப்போது தங்கள் குழந்தைகளுக்கு அவசரப்படாமல் நேரத்தையும் இடத்தையும் கொடுக்கிறார்கள். பெண்ணின் பெற்றோராக இருந்தாலும் சரி, பையனாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கருத்துக்களுடன் உள்ளனர். இது இன்றைய இளைஞர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமண செயல்முறையை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது" என்றனர்.


திருமணம் செய்துகொள்வதன் முக்கியத்துவம் இன்றைய தலைமுறையினரின் மனதில் அதிகம் உள்ளது, அதில் இருந்து முன்னேறிச் செல்வது, இந்தச் செயல்பாட்டில் அவர்களின் பெற்றோரை அவர்களுக்கு உதவ அனுமதிப்பதும் பலரின் தழுவல் அல்லது உண்மையில் விரும்புவதாக உள்ளது என்று மிஷி மற்றும் தானியா கூறுகிறார்கள்.


மேலும் கூறிய அவர்கள், "குடும்பப் பின்னணி, வாழ்க்கை முறை மற்றும் மனநிலை ஆகியவை அனைத்தும் சீரமைக்கப்பட விரும்பும் சில விஷயங்கள். ஒருமுறை மனம் இல்லாமல் டேட்டிங் செய்வதால் சோர்வடைந்த இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையின் இந்த பெரிய முடிவில் அவர்களுக்கு உதவ பெற்றோரிடம் திரும்புகிறார்கள்" என்றனர்.  


மேலும் படிக்க | Love Symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்கள் என்று அர்த்தம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ