ஆபாச தணிக்கைக்கு எதிராக FB அலுவலம் முன் நிர்வாண போராட்டம்!
பேஸ்புக்கில் ஆபாசம் வேண்டும் என அலுவலகம் முன் ஆடையில்லாமல் போராட்டம் நடத்திய பெண்கள்....
பேஸ்புக்கில் ஆபாசம் வேண்டும் என அலுவலகம் முன் ஆடையில்லாமல் போராட்டம் நடத்திய பெண்கள்....
உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முகநூலை அறிமுகம் செய்தார். உலக மக்களிடையே பெரும் பங்கை வைக்கிறது இந்த முகநூல். உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்து சமூகவலைதளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆபாச பதிவுகளுக்காக கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. முகநூளில் பதிவிடப்படும் மனிதனின் அந்தரங்க உறுப்புகள், ரத்தம் ஆகியவற்றை வெளிப்படையாக தெரியும் படியிலான பதிவுகளுக்கு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகம் முன்பு ஆடையில்லாமல் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். #WeTheNipple என்ற ஹேஷ் டேக்கில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த புகைப்படத்தில் பெண்கள் நடுரோட்டில் ஆடையில்லாமல் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் தங்களது மார்பகங்களை ஆண்களின் நெஞ்சுப்பகுதி போன்ற ஒரு டிசைன் செய்து அதை வைத்து மறைத்துக்கொண்டனர்.
இந்த போராட்டத்தை நடத்திய டுன்னிக் (Spencer Tunick) என்பவர் இது குறித்து கூறும்போது பேஸ்புக் பெண்களுக்கான மார்பகங்கள் தெரிந்தால் சென்சார் செய்கிறது. ஆனால் ஆண்கள் சட்டையில்லாமல் இருந்தால் அதை சென்சார் செய்வதில்லை. அதே நேரத்தில் சிலை மற்றும் பெயிண்டிங்கில் நிர்வாணமாக இருக்கும்படியான புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டால் அதை சென்சார் செய்வதில்லை. நிர்வாணம் என்பது ஆபாசமில்லை. உலகம் முழுவதும் இந்த பொது புத்தி நிலவுகிறது. இதை மாற்ற வேண்டும் அதற்காகவே இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுகிறேன்." என அவர் கூறினார்.