புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகள் மூலம் ஜாதகம் சொல்லப்படுவதைப் போல எண் கணிதத்திலும் (Numerology), ஒருவரின் எதிர்காலத்தை அவர் பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு நபரின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையை வைத்து அவருக்கான பலன்களை கணிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உதாரணமாக, ஒருவர் ஏதேனும் ஒரு மாதத்தின் 15 ஆம் தேதி பிறந்திருந்தால், 1 மற்றும் 5 ஐக் கூட்டினால் அந்த நபரின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகை 6 ஆக இருக்கும்.  பிறந்த தேதியை  கூட்டி கிடைக்கும்  ஒற்றை எண், அதாவது கூட்டுத் தொகை பிறந்த எண் ஆகும்.  உதாரணத்திற்கு 1,10,19, 28 என்றால் அவர்களின் பிறந்த எண் 1 ஆகும்.


2022 ஆம் ஆண்டின் இலக்கங்களின் கூட்டுத்தொகை 6 ஆக இருப்பதால், பிறந்த எண் 6 உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதே நேரத்தில், 6 ஆம் எண் சுக்கிர கிரகத்தின் எண்ணாகக் கருதப்படுகிறது. மகிழ்ச்சி, அழகு, தொழில், செல்வம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக சுக்கிரம் கருதப்படுகிறது. பிறந்த எண் 6 என உள்ளவர்களை தவிர, பொதுவாகவே இந்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும்.


பிறந்த எண் 1: எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிறந்த எண் 1 ஆகும். பிறந்த எண் 1-ன் சொந்தக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். அவருடைய தொழில் பிரகாசிக்கும். வேலை, வியாபாரம் என இரண்டிலும் முன்னேற்றம் இருக்கும். பெரும் பண ஆதாயம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.


ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும்  5 ராசிக்காரர்கள்!


பிறந்த எண்  2: எந்த மாதத்திலும் 2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு  பிறந்த எண் 2 ஆகும். இவர்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். அந்ஹ வாய்ப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமானம் பெரிய அளவில் அதிகரிக்கும். இது பொருளாதார நிலைமையை வலுப்படுத்தும். உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பால், நீங்கள் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வீர்கள்.


பிறந்த எண்  6: எந்த மாதத்திலும் 6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிறந்த எண் 6 இருக்கும். இந்த ஆண்டு பிறந்த 6-ன் சொந்தக்காரர்களுக்கு அதிகபட்ச பலனைத் தரும், ஏனெனில் இந்த ஆண்டின் இலக்கங்களின் கூட்டுத்தொகை 6 ஆகும். சுக்கிரன் கிரகம் இந்த ராசிக்காரர்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இதைத் தவிர, பொருள் சுக அனுபவங்கள் நிறைய இருக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR