அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் ஐந்து ராசிகளின் மீது அடுத்த 13 நாட்களுக்கு இருக்கும். பண வரவு பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் நீங்களா?

Written by - ZEE Bureau | Last Updated : Nov 26, 2021, 07:05 AM IST
  • சுக்கிரனின்ஆட்சியில் உள்ளவரா?
  • 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை உங்கள் மீதுதான்!
  • மதிப்பும் மரியாதையும் பெறும் ராசிக்காரர் நீங்கள் தான்!
அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும்  5 ராசிக்காரர்கள்!

புதுடெல்லி: தற்போது சுக்கிரன் கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். அடுத்த 13 செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் ஐந்து ராசிகளின் மீது  பொழியப்போகிறது. லக்ஷ்மி தேவியின் கடைக்கண் பார்வை பட்டால், வறுமை அகலும், செல்வம் கொழிக்கும், மகிழ்ச்சி செழிக்கும். இந்த அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் (Astrology Prediction) என்பதை தெரிந்துக் கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரங்களின்படி, சுக்கிரன் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தருபவர். தற்போது, சுக்கிரன் தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார். தனுசு ராசியில் 13 நாட்கள் தங்கி 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை அன்னை பொழியவிருக்கிறார்.   சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கும்போது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.  

வேலை-வியாபாரத்தில் பதவி உயர்வுக்கான யோகம்
கன்னி (Virgo): தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இது மாணவர்களுக்கு முன்னேற்றம் தரும் நேரம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அன்னையின் அருளால் நிதி வரவுகள் அதிகரிக்கும், நிலுவையில் உள்ள கடன்கள் திரும்பக் கிடைக்கும்.  

மேஷம்: புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். அன்னை லட்சுமியின் அருளால் பண ஆதாயம் உண்டாகும்.  

READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடும் ராசிக்காரர்கள்
விருச்சிகம்: லக்ஷ்மி அன்னையின் அருளால் பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். சமய, ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கல்வித்துறையில் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு அமையும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு, சற்று சுணக்கமான நேரம் தான். அன்னையின் லட்சுமியின் கடைக்கண் பார்வையினால், செல்வமும் லாபமும் உண்டாகும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

மரியாதை அதிகரிக்கும்
மிதுனம்: கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். பணமும் லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கௌரவம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். லட்சுமியின் அருளால் தொட்ட காரியம் துலங்கும்.  .

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை.)

READ ALSO | கருடபுராணத்தின் இந்த 7 விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், நரகமும் வெகு தூரமே!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News