Asian Paints Apex Ultima: ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பதே தங்களது வாழ்க்கையின் முக்கிய லட்சியமாக இருக்கும். இது நம் தலைக்கு மேல் உள்ள கூரையின் பாதுகாப்பையும், குடும்பத்திற்கு அரவணைப்பையும் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வையும் உறுதி செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது வீடுகளில் எத்தனை மாடிகள் இருந்தாலும், அது நமக்கு பணி முடிந்துவிட்டு திரும்பி வந்து ஓய்வு எடுக்கும் ஒரு கூடு தான் ஆகும். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போதோ அல்லது புது வீட்டை வாங்கும்போதோ, அதன் பாதுகாப்பை மற்றும் அதன் முழுமை நிலையை உறுதிசெய்து கொள்ளுதல் வேண்டும்.


சுவர்களுக்கு வர்ணம் தீட்டுவது என்பது வெளிப்புற அழகுக்கு மட்டுமல்லாது, மழை, தூசி மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்தும் சுவர்களை பாதுகாப்பதற்கு மிக முக்கியமானதாக அமைந்து உள்ளது. இந்நிலையில், எது சிறந்த வானிலை பாதுகாப்பை வழங்குகிறது என்பதை தீர்மானிப்பது மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது.


வெளிப்புற சுவர்களுக்கு, லேமினேசன் முறையில் வர்ணப் பூச்சு மேற்கொள்வதால் ஏற்படும் பளபளப்பு, பலரது பாராட்டைப் பெறும் என்ற வேளையில், அல்ட்டிமா ப்ரொடெக், இயற்கையின் கூறுகளில் இருந்து சிறந்த மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதாக பலரும் நம்புகின்றனர். ஏசியன் பெயின்ட்ஸ் அபெக்ஸ் அல்ட்டிமா (Asian Paints Apex Ultima) ப்ரொடெக், லேமினேசன் பெயின்ட் என்பது பலருக்கும் தெரியாது. இது சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாது, மனதிற்கு முழுநிறைவையும் வழங்குகிறது.


ஏசியன் பெயி்ன்ட்ஸ் அபெக்ஸ் அல்ட்டிமா ப்ரொடெக் என்பது லேமினேசன் பெயின்ட் ஆகும். இது நமது சுவர்களை மழை, தூசி, ஈரப்பதம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. இது 10 வருட செயல்திறன் உத்தரவாதத்தின் ஆதரவு உடன், சிறந்த பூச்சு மற்றும் எளிதில் சுத்தப்படுத்தும் தன்மையை வழங்கும் நாட்டின்  மிக நீண்ட காலம் உழைக்கும் வெளிப்புற எமல்ஷன்களில் ஒன்றாக விளங்குகிறது.


ஏசியன் பெயின்ட்ஸ் அபெக்ஸ் அல்ட்டிமா ப்ரொடெக் பயன்படுத்துவதால், கிடைக்கும் நன்மைகள் கீழே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.


• இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது ஆகும் : ஏசியன் பெயின்ட்ஸ் அபெக்ஸ் அல்ட்டிமா ப்ரொடக்-கில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள், கன உலோகங்கள் மற்றும் ஆல்கைல்பீனால் எத்தோஜைலேட்கள் (APEOs) இல்லை. இது குறிப்பிட்ட VOC வரம்புகள் உடன் இணங்கும் வகையில் உள்ளது.


• சுவரில் உள்ள வெடிப்புகளை இணைக்கிறது : இதன் படலம், மீக நீண்ட அளவு கொண்டதாக உள்ளது. இதில் உள்ள தனித்துவ நார் வலுவூட்டல், 2 மில்லி மீட்டர் வரையிலான விரிசல்களை இணைக்கும் திறன் கொண்டதாக அமைந்து உள்ளது.


• கட்டமைப்பு பாதுகாப்பு : இந்த வெளிப்புற எமெல்சன் பெயின்ட், சிறந்த கரியமிலவாயு (CO2) பரவல் (கார்போனேசன்) எதிர்ப்பை வழங்குகிறது. கான்கிரீட் மேட்ரிக்ஸில் உள்ள கம்பிக்ளுக்கு இடையே ஏற்படும் அரிமானத்தை தடுக்கிறது.


அல்ட்டிமா ப்ரொடக் லேமினேசன் பெயின்ட் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், அலெக்சாண்டர் பாபு மற்றும் பகவதி பெருமாள் நடித்து உள்ள நகைச்சுவையான விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது. இந்த விளம்பரத்தில், லேமினேசன் பெயிண்ட் மற்றும் அல்ட்டிமா ப்ரொடெக் இவற்றில் எது உயர்ந்தது குறித்து வாதிடும் இரண்டு அண்டை வீட்டாரின் கதாபாத்திரங்களில், அலெக்ஸ் பாபு இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார்.


பகவதி பெருமாள், குருஜியாக வரும் வரை, அவர்களின் வார்த்தைப்போர் தொடர்கிறது. ஏசியன் பெயின்ட்ஸ் அபெக்ஸ் அல்ட்டிமா ப்ரொடக் மற்றும் லேமினேசன் பெயின்ட் இரண்டும் ஒன்றுதான் என்று பகவதி பெருமாள் அவர்களுக்கு விளக்குகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR